1 முதல் 9-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 
இந்நிலையில் தமிழக பள்ளியில் பயிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள், இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.


புத்தகங்கள் ஆன்லைன் மூலமும் விற்பனை கிடைக்கும். தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


CBSE மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. எனவே CBSE மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மண்டல அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். 


மேலும், ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அச்சடிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்!