வெனிசுலா நாட்டின் அதிபராக ஜக்கிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் வெனிசூலாவில் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் சாவேஸ் காலமானதை அடுத்து நிக்கோலஸ் மதுரோ தற்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ளார்.


கடந்த சில வருடங்களாகவே வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுராவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களில் 120-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அதிபர் மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


இந்நிலையில் வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தலில் நிக்லோஸ் மதுரோ வெற்றிப்பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன்னை விட 44% வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார். ஆனால் இந்த வெற்றியானது தேர்தல் முறைகேட்டால் பெறப்பட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.