நித்தாஸ் டி20 தொடர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 167 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று விளையாடி வருகின்றது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்த வந்த வங்கதேச அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது.



வங்கதேச அணித்தரப்பில் சபீர் ரஹுமான் அதிரடியாக விளையாடி 77(50) ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.


இந்திய அணி தரப்பில் சஹால் மீண்டும் தன் சுழற்பந்து திரமையினை நிறுபித்துள்ளார். இந்நிலையில் சஹால் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டையும், உனட்கட் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டையும் பெற்றனர்.


இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய காத்திருக்கிறது!