மதவாத சக்திகளுடன் கூட்டணி பேச்சே இல்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக அவர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர் தெரிவிக்கையில்... 


"பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, குற்றவாலிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.


பாஜக-வுக்கு அம்முக ஆதரவாக செயல்படுவதாக கூறுவது ஏற்புடையுதுள்ள. மதவாத சக்திகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதிமுக பிளவுப்பட்டதற்கு காரணமே பாஜக தான். பாஜக-வை பார்த்து நாங்கள் பயப்படுவதாகவும், பின்வாங்குவதாகவும் சிலர் விமர்சனங்களை வைப்பது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர் தமிழக அரசு இருக்காது, எனவே விரைவிலேயே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் வரும் என தெரிவித்துள்ளார்.


அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து அனுவருக்கும் பதில் அளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்!