அபுதாபி விமான நிலையம் இன்று 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான அதன் பயணிகள் போக்குவரத்து தரவுகளை வெளியிட்டது. விமான நிலையத்தில் இந்த காலத்தில் 2.56 மில்லியன் பயணிகள் வந்துள்ளனர் என்றும் இது கடந்த ஆண்டு இதே காலத்தில் காணப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் காலாண்டு புள்ளிவிவரங்கள், 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 807,310 பயணிகளுடன் ஒப்பிடும்போது 2,563,297 பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துகிறது. உலகம் முழுவதும் கோவிட்-19 தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் 218% பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


இந்த கலாத்தில், விமான நிலையம் 2021 இல் 16,351 உடன் ஒப்பிடும்போது 22,689 விமானங்களின் வருகையை பதிவு செய்துள்ளது. இது 38.8% அதிகரிப்பாகும்.


2021 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, விமான நிறுவனங்கள் தேவையின் அதிகரிப்புக்கு இடமளித்தது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


இந்தியாவிற்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது மற்றும் அபுதாபிக்கு பயணிக்கும் பயணிகளுக்கு கட்டாய பிசிஆர் பரிசோதனையை நீக்கியது போன்றவை விமான போக்குவரத்தை மேலும் அதிகரித்தன. 


மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: விமான டிக்கெட் விலையில் பம்பர் தள்ளுபடி 


இதன் விளைவாக, அபுதாபி சர்வதேச விமான நிலையம், டொமஸ்டிக் விமான நிறுவனங்களான எதிஹாட் ஏர்வேஸ், விஸ் ஏர் அபுதாபி மற்றும் ஏர் அரேபியா அபுதாபி ஆகியவற்றின் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. 10 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய கேரியர்களான கோ ஃபர்ஸ்ட் மற்றும் பெகாசஸ் ஏர்லைன்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன். 


இந்த காலகட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள்:
- இந்தியா (515,927)
- பாகிஸ்தான் (253,874)
- யுனைடெட் கிங்டம் (170,620)
- கிங்டம் ஆஃப் சவுதி அரெபியா (137,582) 
- எகிப்து (127,009) 


முதல் காலாண்டில், இந்த விமான நிலையத்திலிருந்து அதிக பயணிகள் சென்ற நகரங்களில் லண்டன் (123,055), டெல்லி (103,472), இஸ்லாமாபாத் (101,476), கொச்சி (90,022) மற்றும் டாக்கா (89,272) ஆகியவை அடங்கும்.


2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அபுதாபி இன்டர்நேஷனல் சேவை நிலைகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உயர்வாக மதிப்பிட்டுள்ளனர். விமான நிலையத்தின் தூய்மை (98.4%), பாதுகாப்பான உணர்வு (98.2%), மகிழ்ச்சிக் குறியீடு (96.4%) மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ( 97.4%) உள்ளிட்ட அளவீடுகள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன.


அபுதாபியில் தென் இந்திய மக்கள் பலர் வேலை நிமித்தமாக உள்ளதால், இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் இந்தியர்களில் தென் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தமிழகத்திலிருந்து UAE இடையிலான ஏற்றுமதியை அதிகரிக்க ஆதரவு: அமைச்சர் அன்பரசன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR