இந்தியா - துபாய் இடையில் பயணிக்க சலுகை விலையில் விமான டிக்கெட்

துபாயிலிருந்து இந்தியாவிலுள்ள பல நகரங்களுக்கு பயணிக்க சலுகை விலையிலான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 12, 2022, 08:02 PM IST
இந்தியா - துபாய் இடையில் பயணிக்க சலுகை விலையில் விமான டிக்கெட்  title=

துபாயிலிருந்து இந்தியாவிலுள்ள பல நகரங்களுக்கு பயணிக்க சலுகை விலையிலான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மே மாதம் 10ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றுன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் இந்திய ரூபாயில் சுமார் 6000 ரூபாய்க்கு விமான டிக்கெட் கிடைக்கும்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  நிறுவனம் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, துபாய் இந்தியா இடையே அதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவிற்கு 170 வாராந்திர விமானங்களை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு ஊடக சந்திப்பின் போது, ​​துபாய் ஏர்லைன்ஸின் தலைமை வணிக அதிகாரி அட்னான் காசிம், இந்தியா துபாய் இடையே அதிக விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார். 

மேலும் படிக்க | தமிழகத்திலிருந்து UAE இடையிலான ஏற்றுமதியை அதிகரிக்க ஆதரவு: அமைச்சர் அன்பரசன்

இந்த வழித்தடங்களில் கோடைகாலத்திற்கு முன்னதாக தேவை அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவன இந்த முடிவை எடுத்துள்ளது . கூடுதலாக, பட்ஜெட் கேரியர் Wizz Air Abu Dhabi போன்ற புதிதாக தொடங்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கான சேவைகளைத் தொடங்க விரும்புகின்றன.

இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரூபிந்தர் ப்ரார் கூறுகையில், கோவிட் தொற்றுக்குப் பிறகு மீண்டும், ​​​​இரு பகுதிகளுக்கும் இடையே விமான போக்குவரத்து சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது என்றார்.

ஏறக்குறைய இரண்டு வருட இடைநீக்கத்திற்குப் பிறகு, வெளிநாட்டினருக்கான அனைத்து வகை சுற்றுலா விசாக்களையும் இந்தியா மீட்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அபுதாபியில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்ற மதுரையை சேர்ந்த ஊழியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News