ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு முக்கிய செய்தி. பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து இன்று முதல் அமல்படுத்தப்படும் புதிய விதி பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த அபுதாபி முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என அபுதாபி அரசு தெரிவித்திருந்தது. அந்த தடை, இன்று, அதாவது ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. 


அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியான இஏடி, திங்களன்று, இஏடி, அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை மற்றும் அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தலைநகரில் அவற்றுக்கான மாற்றுகள் பற்றிய விளக்கங்கள் இதில் அளிக்கப்பட்டன.


ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் கொள்கையின் அறிமுகத்துக்குப் பிறகு இந்த பயிலரங்கம் நடந்துள்ளது. இந்த கொள்கையை அல் தஃப்ரா பிராந்தியத்தில் ஆட்சியாளரின் பிரதிநிதியும், இஏடி-இன் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான்  அங்கீகரித்தார். இது ஏப்ரல் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. .


அபுதாபி முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் நுகர்வு படிப்படியாகக் குறைவதை உறுதி செய்யும் அதே வேளையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கையை செயல்படுத்த திறம்பட திட்டமிட உதவும் கருவிகளை பற்றி இந்த பயிலரங்கத்தில் விளக்கப்பட்டது. 


மேலும் படிக்க | பயணிகள் ஹேப்பி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பால் மகிழ்ச்சி 


விலக்குகள்


மருந்துக் கடைகளில் உள்ள மருந்துப் பைகள், காய்கறிகள், இறைச்சி, மீன், கோழி, தானியங்கள் மற்றும் ரொட்டி (நாட் பேக்குகள்) ஆகியவற்றுக்கான பைகளுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஃபேஷன் அல்லது எலக்ட்ரானிக் கேஜெட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட பெரிய ஷாப்பிங் பைகள், பொம்மைகள், வெவ்வேறு அளவுகள் மற்றும் வகைகளின் கழிவுப் பைகள், தபால் பார்சல்கள் அல்லது பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் ஆகியவற்றுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


தாவரங்கள், பூக்கள் மற்றும் சலவைகளை கொண்டு செல்வதற்காக உள்ள பைகளுக்கும் விலக்கப்பட்டுள்ளன.


இந்தத் தடை ஜூன் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது அனைத்து சில்லறை விற்பனையாளர்களும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதைத் தடுக்கும்.


வாழ்க்கைச் சுழற்சியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் நுகர்வு முதல் பல உபயோகப் பொருட்களின் நுகர்வு வரை மாறுவதை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒழுங்குமுறை விதிகளை செயல்படுத்துவதற்கான வழிகளையும் பயிலறங்கம் எடுத்துரைத்தது.


இன்ஸ்பெக்டர்களின் பங்கு என்னவாக இருக்கும்?


அபுதாபி தரம் மற்றும் இணக்க கவுன்சில் (ADQCC) அங்கீகரித்த தொழில்நுட்ப தரநிலைகளின்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பை தடையை அமல்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்காணிப்பார்கள்.


சில பெரிய சில்லறை விற்பனையாளர்கள் சமீபத்தில் அபுதாபியில் புதிய கொள்கையை செயல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரிப்பதற்கு மாற்று வழிகள், வளங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெறுவதற்கும் ஒரு தன்னார்வ அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர்.


இந்த சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள், மாற்று பல உபயோக பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும்.


ஏஜென்சி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து, ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களுக்கு நீடித்த மற்றும் பல பயன்பாட்டு மாற்றுகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி சமூக உறுப்பினர்களுக்குக் கற்பிப்பதற்கான திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தும்.


மேலும் படிக்க | வெளிநாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலையா? இந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR