சிங்கப்பூர்: சிங்கப்பூர் வேலை என்பது பலரது கனவாக உள்ளது. சிங்கப்பூர் மட்டுமல்லாமல், எந்த நாட்டில் பணிபுரிய சென்றாலும், அந்த நாட்டிற்கான அனைத்து சட்டதிட்டங்களையும் தெரிந்துகொண்டு, அங்கு பணிபுரிவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெறுவது மிக அவசியமாகும். இல்லையெனில் தேவையில்லாத சட்ட சிக்கல்களில் நாம் சிக்கிக்கொள்ள நேரிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கப்பூரில் முறையான அனுமதி பெறாமல் பணிபுரிந்து, அதன் காரணமாக சமீபத்தில் சிக்கிக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு பிரிட்டன் நபரது வழக்கு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமிந்துள்ளது. 


முறையான பணி அனுமதிச் சீட்டு இல்லாமல் ஃப்ரீலான்ஸ் வேலை செய்ததற்காக வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கு செவ்வாய்க்கிழமை (மே 17) S$6,500 அபராதம் விதிக்கப்பட்டது.


36 வயதான கேலம் ஆர்தர் அலிஸ்டர் ஸ்டூவர்ட், வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ் அவர் மீது வைகக்ப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதைப் போன்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டது.


அவரது சேவையை பயன்படுத்திய ரெஃபினிடிவ் ஆசியா நிறுவனம் மற்றும் ஊடக வல்லுநர் முஹம்மது ஃபிர்தியான்ஷா சலிமத் ஆகியோருக்கும் முறையே S$5,500 மற்றும் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டது.


பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டூவர்ட், 2014ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டவரைத் திருமணம் செய்துகொண்டார். நீண்ட கால அதாவது லாங்க் டர்ம் விஸிட் பாஸில் அவர் இருந்த நிலையில், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் குற்றங்கள் நடந்துள்ளன. 


மனிதவள அமைச்சகம் 2019 செப்டம்பரில் ஸ்டூவர்ட்டுக்கு எதிராக சட்டவிரோத வேலைக்கான தகவலை பெற்று அது குறித்து விசாரணை நடத்தியது.


அப்போது தாம்சன் ராய்ட்டர்ஸ் என அழைக்கப்படும் ரெஃபினிடிவ் நிறுவனத்திற்காக ஃப்ரீலான்ஸ் தொலைக்காட்சி மற்றும் வீடியோ தயாரிப்புப் பணிகளைச் செய்ததாக ஸ்டூவர்ட் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் அவர் சரியான பணி அனுமதிச் சீட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 25, 2015 முதல் ஜூலை 8, 2016 வரை, சுமார் அரை ஆண்டுக்கும் மேலாக அவர் செய்த பணிகளுக்காக அவருக்கு S$30,000 சம்பளம் வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் 2015 இல் ரெஃபினிடிவ்-ன் செய்தி வணிகத்தில் உதவி தயாரிப்பாளராக ஸ்டூவர்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. அவர் இந்த வேலையை ஏற்றுக்கொண்டார், ஆனால் வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.


நிறுவனம் ஸ்டூவர்ட் சார்பாக வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பித்தது. ஆனால் விண்ணப்பம் செப்டம்பர் 9, 2015 அன்று நிராகரிக்கப்பட்டது.


நவம்பர் 23, 2015 அன்று ஸ்டூவர்ட் தங்களிடம் பணிபுரிய ஒப்புதல் கடிதத்திற்கு நிறுவனம் விண்ணப்பித்தது. இது அந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று நிராகரிக்கப்பட்டது.


மேலும் படிக்க | ஷார்ஜா வழியாக லேப்டாப்பில் கடத்தப்பட்டு திருச்சி வந்த தங்கம்: சுங்கத்துறை வீடியோ இதோ


நவம்பர் 25, 2015 இல், ஒப்புதல் கடிதத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கையில், ரெஃபினிடிவ் ஸ்டூவர்ட்டுக்கு ஒரு மாதத்திற்கு S$4,500 என்ற விகிதத்தில் ஃப்ரீலான்ஸ் வேலையை வழங்கியது.


நீதிமன்ற ஆவணங்களின்படி, சரியான பணி அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்தும் ஸ்டூவர்ட் இதை ஏற்றுக்கொண்டார்.


ஸ்டூவர்ட் சட்டத்திற்குப் புறம்பாக சுயதொழில் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், நிறுவனம் அவரது ஒப்புதல் கடிதத்திற்கு விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாக கூறி அரசுத் தரப்பு S$7,000 முதல் S$8,000 வரை அபராதம் கேட்டது. 


ஸ்டூவர்ட் தனது சட்டவிரோத வேலையில் இருந்து குறிப்பிடத்தக்க ஆதாயங்களையும் பெற்றார் என்று மனிதவள அமைச்சகத்தின் வழக்கு விசாரணை அதிகாரி ஹூஸ்டன் ஜோஹன்னஸ் கூறினார்.


ஸ்டூவர்ட்டின் டிஃபென்ஸ் வழக்கறிஞர் ரெமி சூ, அவரது வாடிக்கையாளரின் முக்கிய குற்றம், அவரது ஒப்புதல் கடிதத்தின் நிலையைச் சரிபார்க்கத் தவறியதுதான் என வாதாடினார். மேலும் அவர் சம்பாதித்த தொகை தண்டனைக்கு பொருத்தமானது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். 


ரெஃபினிடிவ்-ன் தரப்பில், ஃப்ரீலான்ஸ் சலுகையை வழங்கியபோது, ​​ஸ்டூவர்ட் சரியான பணி அனுமதிச் சீட்டை வைத்திருக்கவில்லை என்பதை அறிந்திருப்பதாக நிறுவனம் ஒப்புக்கொண்டது.


செல்லுபடியாகும் ஒர்க் பாஸ் அதாவது வேலை செய்வதற்கான அனுமதி இல்லாமல் ஃப்ரீலான்ஸ் வேலை செய்ய ஸ்டூவர்ட்டைத் தூண்டியதற்கான ஒரு குற்றச்சாட்டையும் நிறுவனம் ஒப்புக்கொண்டது.


வெளிநாடுகளில் பணிக்கு செல்லும் நபர்கள், அந்த நாட்டின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்வது முக்கியமாகும், மேலும் பணிபுரிவதற்கான பரிபூரண அனுமதியையும் பெறுவது கட்டாயமாகும். இல்லையெனில் தேவையில்லாத சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிக அளவிலான அபராதங்களையும் செலுத்த வேண்டி வரலாம்.  


மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR