WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை

இந்தியாவிற்கு அல்லது உலகில் உள்ள பிற நாடுகளுக்கு பணம் அனுப்புவது என்பது இணையம், மொபைல் போன்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிதி தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளபட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றால் எளிதாகிவிட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 02:57 PM IST
  • 12 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள நம்பகமான தளம்.
  • இதன் சேவை 59 நாடுகளில் கிடைக்கிறது.
  • வைஸ் என்பது லண்டனை தளமாகக் கொண்ட ஆன்லைன் சேவை வழங்குநர்.
WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை title=

இந்தியாவிற்கு அல்லது உலகில் உள்ள பிற நாடுகளுக்கு பணம் அனுப்புவது என்பது இணையம், மொபைல் போன்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிதி தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளபட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றால் எளிதாகிவிட்டது.

சர்வதேச பணப் பரிமாற்றங்களில், பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் அல்லது நாணய மாற்று விகிதங்கள் உள்ளிட்ட செலவுகள் அடங்கும். அதோடு சில செயல்முறை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில், அது மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

உலக வங்கியின் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் சர்வதேச எல்லைகளுக்குள் பணம் அனுப்புவதற்கான சராசரி செலவு 6.5% ஆக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் பணம் அனுப்புவதற்கான செலவு குறைந்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கான 2030க்குள் ஒரு பரிவர்த்தனைக்கு 3% என்ற அளவை விட இது இன்னும் அதிகமாக உள்ளது. 

வைஸ் (Wise)

வைஸ் என்பது லண்டனை தளமாகக் கொண்ட ஆன்லைன் சேவை வழங்குநர். விரைவாகவும், பாதுகாப்பாகவும் பண பரிவர்த்தனை செய்ய உதவுவதோடு, இதில் சர்வதேச பண பரிமாற்ற கட்டணங்களும் குறைவு. 12 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள நம்பகமான தளமாகவும் உள்ளது. இதன் சேவை 59 நாடுகளில் கிடைக்கிறது. 80 நாடுகளுக்கு மேல் இதில் பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | UAE: இனி ரெசிடென்சி ஸ்டிக்கருக்கு பதிலாக புதிய எமிரேட்ஸ் ஐடி

வைஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள்

உங்கள் மின்னஞ்சல் அல்லது பேஸ்புக் கணக்கு மூலம் எளிதாகவும் இலவசமாகவும் இதில் பதிவு செய்யலாம்

இணையதளம் அல்லது வைஸ் மொபைல் ஆப் மூலம் பணம் அனுப்பலாம்

குறைந்த மற்றும் வெளிப்படையான கட்டணம்

விரைவான பண பரிமாற்றம்

மறைக்கப்பட்ட கட்டணங்கள் 

உண்மையான மாற்று விகிதங்கள் (ராய்ட்டர்ஸ் அல்லது கூகுள் மூலம் வழங்கப்படுகிறது)

முன்னணி UK வங்கிகளை விட 8 மடங்கு மலிவான கட்டணம்.

வணிகக் கணக்கையும் திறக்கலாம்

50+ உலக கரன்சிகள்

குறைந்த கட்டணத்தில் கரன்சி மாற்றம்

வைஸ் டெபிட் கார்டுக்கான அணுகல் மற்றும் 200+ நாடுகளில் பணம் எடுக்கும் வசதி

பன்மொழி வாடிக்கையாளர் சேவை

நிதி நடத்தை ஆணையத்தால் (FCA) கட்டுப்படுத்தப்படுகிறது

வைஸ் மூலம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் முறை

உங்கள் மின்னஞ்சல் அல்லது உங்கள் Facebook, Google அல்லது Apple ஐடியைப் பயன்படுத்தி Wise தளம் அல்லது செயலியில் ஆன்லைனில் பதிவு செய்யவும்.

பரிமாற்றத் தொகையை உள்ளிடவும்

பெறுநரின் விவரங்களைச் சேர்க்கவும்

உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும் (பெரிய இடமாற்றங்களுக்கு)

உள்ளூர் வங்கி பரிமாற்றம், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிமாற்றம்

வைஸ் கால்குலேட்டரைக் கொண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு எவ்வளவு அனுப்பலாம் என்பதைச் சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | UAE - இந்தியா விமான பயணம்; கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

வைஸ் மூலம் பணம் அனுப்புவதற்கான செலவு

இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மாற்றப்பட்ட தொகையில் 0.29 GBP+ 0.51% ஆகும். கட்டணம் செலுத்தும் முறையைப் பொறுத்து இது மாறுபடும்.

சில முறைகள் மலிவானவை ஆனால் விரைவான பணபரிமாற்றம் இருக்காது. சில அதிக கட்டணம் கொண்டவை. ஆனால் பண பரிமாற்றம் விரைவாக இருக்கும். உங்கள் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் முன் மொத்தக் கட்டணங்கள் எவ்வளவு என்பது முன்கூட்டியே காட்டப்படும்.

Wise பின்வரும் கட்டண முறைகளை வழங்குகிறது:

வங்கி பரிமாற்றம்
டெபிட் கார்டு
கடன் அட்டை
PISP (கட்டண தொடக்க சேவை வழங்குநர்
ஸ்விஃப்ட்

வங்கி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்துவது கட்டணம் குறைவு. ஆனால் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை விட பண பரிமாற்றம் மெதுவாகவே இருக்கும். அவசர தேவை இல்லை என்றால், பணத்தைச் சேமிக்க வங்கி பரிமாற்றத்தை பயன்படுத்தலால்.

பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு சிறிய அளவிலான பண பரிமாற்றங்களுக்கு வைஸ் சிறந்தது, ஆனால், பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கு ($10,000க்கு மேல்) கட்டணம் அதிகம். Wise ரொக்க பணப் பரிமாற்றங்களை வழங்காது. எனவே உங்கள் பணத்தைப் பெற பெறுநர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: சென்னை - சிங்கப்பூர் வழிதடத்தில் சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News