பதிண்டா: பெண்களின் அழகுப் போட்டியின் போஸ்டர்கள் ஏற்படுத்திய சர்ச்சையால் இருவர் கைது செய்யப்பட்டனர். அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. பஞ்சாபில் நடைபெறவிருந்த 'அழகு போட்டியில்' அமைப்பாளர்களின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு ஏற்பட்டது. அக்டோபர் 23 ஆம் தேதி பதிண்டாவில் உள்ள ஸ்வீட் மிலன் ஹோட்டலில் நடைபெறவிருந்த இந்த அழகுப்போட்டியின் விளம்பரங்களால் கோபமடைந்த பல்வேறு சமூக மற்றும் மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் அழகுப் போட்டி என்ற பெயரில் பெண்களை அவமதித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகுப் போட்டி என்ற போர்வையில் பெண்களை தவறாக சித்தரித்ததாக கூறப்படும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.


மேலும் படிக்க | விளையாட்டிலும் மனிதனை விஞ்சும் ரோபோ! கூடைப்பந்து விளையாட்டில் Robot கின்னஸ் சாதனை


இந்தப் போட்டியில் பொதுவான சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும், இந்த அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு கனடாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய இளைஞனை திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விளம்பரத்தால் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த நிகழ்வின் மூலம் பெண்களை அவமதித்து அநாகரீகமான முறையில் அதை விளம்பரமும் செய்திருப்பதாக பெண்கள் அமைப்புகளும் கொந்தளிக்கின்றன. அழகு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுரிந்தர் சிங் மற்றும் ராம் தயாள் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இன்று (அக்டோபர் 14, வியாழக்கிழமை) பதிண்டாவின் அஜித் சிங் சாலை பகுதி உட்பட நகரின் பல பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 


மேலும் படிக்க | உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்


மக்கள் எதிர்ப்பு


சுவரொட்டியின் படி, அழகுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு கனடாவைச் சேர்ந்த என்.ஆர்.ஏ. ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. பொது சாதிகளை சேர்ந்த அழகான பெண்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலானது.  


இதுபோன்ற அழகுப் போட்டி பெண்களை புண்படுத்தும்


இந்த அழகுப் போட்டி பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும் என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். அமைப்பாளர்கள் சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பது மட்டுமின்றி, பெண்களை இழிவுபடுத்தியதையும் சுவரொட்டிகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று அனைவரும் விமர்சிக்கின்றனர்.


அதே சமயம், இதுபோன்ற ஒரு அழகு நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக தங்களிடம் யாரும் முன்பதிவு செய்யவில்லை என்று ஹோட்டல் ஸ்வீட் மிலன் உரிமையாளர் தெரிவித்தார். தேவையில்லாமல் தனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.  


மேலும் படிக்க | கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ