கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க செல்கின்றனர்.  இந்தியாவில் இருந்து கல்வி கற்க செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர படிப்பிற்கான அனுமதி பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். விசா விண்ணப்பங்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில்,  விசா பெறுவதில் தாமதம் நீடிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு இறுதிக்குள் 2.7 மில்லியன் மாணவர் விசா விண்ணப்பங்கள் வரலாம் என கனடா எதிரபார்க்கிறது. 2019 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில், விசா விண்ணப்பங்கள் 55% அதிகரித்துள்ளதால், விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர் விசா பெற பொதுவாக சுமார் 4 வாரங்கள் எடுக்கும், ஆனால் இப்போது காத்திருக்கும் காலம் 3 முதல் 4 மாதங்கள் வரை அதிகரித்துள்ளது. பல விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால்,  இந்திய விண்ணப்பதாரர்களிடையே ஒரு விதமான பதற்ற உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பதாகவும் கனடா உயர் தூதரகம் உறுதியளித்துள்ளது. இதற்கிடையில், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தை தனது கவனத்தில் எடுத்துக்  கொண்டு, “இந்தப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, இந்திய மாணவர்கள் ஏற்கனவே கனேடிய நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை டெபாசிட் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை, விரைவாகச் செயல்படுத்துமாறு  கனேடிய அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ” என தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | UAE: எண்ட்ரி விசா வழிமுறைகளில் மாற்றங்கள், விவரம் இதோ


மாணவர்களுக்கு  உதவும் வகையில், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தகவல் மற்றும் அவசரச் செயலாக்கத்திற்கான கோரிக்கையை IRCC இணையப் படிவத்தின் மூலம் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ