இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்

இங்கிலாந்து கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டுள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் விசாவிற்கு விண்ணப்பிப்பார்கள் என இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 05:44 PM IST
  • இங்கிலாந்தில் படிக்கத் திட்டமிடும் மாணவர்கள் தங்கள் விசாக்களுக்கு விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விசாவைப் பெற்ற பின்னரே தங்கள் விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும்.
  • விசாக்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய தூதரகம் நடவடிக்கை.
இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம் title=

தில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு ட்வீட்டில், இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை மற்றும் அதிக முன்னுரிமை விசாக்கள் விரைவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் விசா பெறுபவர்களின் தேவை அதிகமாக இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதால், இங்கிலாந்தில் படிக்கத் திட்டமிடும் மாணவர்கள் தங்கள் விசாக்களுக்கு விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த வார தொடக்கத்தில், இந்தியாவிற்கான UK தூதார் அலெக்ஸ் எல்லிஸ், இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் விசா தாமதங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க, மக்கள் தங்கள் விசாவைப் பெற்ற பின்னரே தங்கள் விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இங்கிலாந்து கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டுள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் விசாவிற்கு விண்ணப்பிப்பார்கள் என இங்கிலாந்து எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். விசாக்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்; சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

செய்தியாளர் மாநாட்டில் பேசிய இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர், தாமதத்திற்கான காரணங்களையும் அவர் கோடிட்டுக் காட்டினார், மேலும் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இங்கிலாந்து விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை இது வரை இல்லாத அளவில் உள்ளது என்றார். அதோடு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போன்ற பிற உலகளாவிய நிகழ்வுகளும் தாமதத்திற்கு வழிவகுத்தன.

மேலும் படிக்க | கேரளா பழங்குடி மாணவர்களுக்காக 3டி கல்வி அரங்கை திறந்த அமீரக தொழிலதிபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News