கட்டுமானம், கடல் சார் வணிக துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும், தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கும் முதலாளிகள், தங்கள் தொழிலாளர்களை கட்டாய சுகாதார திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற விதி சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ள டாக்டர் டான், வெள்ளிக்கிழமை மாலை ஃபாரர் பூங்காவில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஸ்டார்மெட் மருத்துவ மையத்தின் திறப்பு விழாவில் பேசுகையில், இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் பலனடைந்தவர்கள் குறித்து எடுத்துரைத்தார். 


"இது வலுவான மருத்துவர் - நோயாளி உறவுகளை உருவாக்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு சிறந்த ஆரோக்கிய நலன்களை அடையும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.


சிங்கப்பூரில் உள்ள 370,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 10ல் நான்கு பேர், உடல்நலப் பாதுகாப்புச் செலவுகளை ஈடுகட்ட  கொண்டுவரப்பட்டுள்ள முதன்மை பராமரிப்புத் திட்டத்தில் (PCP) சேர்ந்துள்ளனர் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.


திட்டத்தின் முன்னேற்றம் குறித்த புதுப்பிப்பு தகவலை வழங்கிய மனிதவள துறை அமைச்சர் டான் சீ லெங், திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கென் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சுகாதாரக் குழுவால் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.


மேலும் படிக்க | இதையெல்லாம் செய்யக்கூடாது: முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சவூதி அரேபியா


கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட, PCP திட்டம் வெளிநாட்டு ஊழியர்களின் பெரும்பாலான ஆரம்ப சுகாதாரத் தேவைகளுக்கான செலவை ஈடுசெய்யும். இதில் பணி அனுமதி தேவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள், வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் மற்றும் டெலிமெடிசின் ஆகியவை அடங்கும்.


ஒரு PCP திட்டத்தின் இணைவதற்கான ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு $108 முதல் $138 வரை இருக்கும். இது புலம்பெயர்ந்த தொழிலாளி வசிக்கும் பகுதிக்கு பொறுப்பான சுகாதார வழங்குநருக்கு வழக்கமான மாத தவணைகளில் செலுத்தப்படலாம்.


ஏப்ரல் முதல், கட்டுமானம், கடல்சார் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும், தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கும் முதலாளிகள் PCP திட்டத்தில் இணைக்க வேண்டும். அத்தகைய தொழிலாளர்கள் 370,000 உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவர்களது முதலாளிகள் திட்டங்களை வாங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை: சிம் கார்டில் இந்த தவறை செய்யாதீர்கள்


மேலும் படிக்க | பயணிகள் ஹேப்பி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பால் மகிழ்ச்சி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR