துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: 90% தள்ளுபடியுடன் DSS சேல் துவக்கம்
Dubai Summer Surprises: துபாய் வாழ் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி. 90% சலுகையுடன் அதிரடி விற்பனையில் கலந்துகொள்ள அரிய வாய்ப்பு உள்ளது.
துபாய் சம்மர் சர்ப்ரைஸின் (டிஎஸ்எஸ்) 25வது பதிப்பு நாளை முதல் 25 மணி நேர விற்பனையுடன் தொடங்குகிறது. ஜூலை 1, 2 தேதிகள் வார இறுதி நாட்களாகவும் உள்ளன. இந்த நேரத்தில், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், டெய்ரா, மெய்செம் மற்றும் அல் ஷிண்டகா ஆகியவை பெரிய பிராண்ட் ஃபேஷன் லைன்கள், எலக்ட்ரானிக்ஸ், குழந்தைகள் உடைகள் மற்றும் பிற பொருட்களின் விற்பனையை வழங்கும்.
விசிட் துபாய்-இன் படி, 25வது ஆண்டு நிறைவு டீல்கள் மற்றும் 90 சதவீதம் வரையிலான தள்ளுபடி ஆகிய சலுகைகள் ஜூலை 1 அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஜூலை 2 ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் வழங்கப்படும்.
இந்த சேலில் ஷாப்பிங் செய்யும் ஒரு அதிர்ஷ்டசாலி DSS 25 - ஹவர் ஷேர் மில்லியனராவார். "வெற்றியாளருக்கு SHARE செயலியில் ஒரு மில்லியன் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். இதன் மதிப்பு சுமார் Dh100,000 ஆகும். இந்த புள்ளிகளை எந்த Majid Al Futtaim பிராண்ட் இடத்திலும் ரெடீம் செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை விசிட் விசாக்கள் ரத்து
இதில் பங்கேற்பதற்கு, ஷாப்பிங் செய்பவர்கள் ஒரே முறையாகவோ அல்லது மொத்த ஷாப்பிங்கிலோ, 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவிட வெண்டும். பின்னர் SHARE செயலியில் ரசீதுகளை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.
செப்டம்பர் 4 வரை இருக்கும் DSS, தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை வழங்குவதுடன் பலதரப்பட்ட நிகழ்வுகளையும் வழங்கும்.
ஜூலை 25ஆம் தேதி அனைத்து மால்களிலும் 90 சதவீத தள்ளுபடியுடன் கூடிய ஃபிளாஷ் சேல் நடைபெறும். இந்த சேலின் கடைசி வார இறுதியான செப்டம்பர் 2-4 ஆம் தேதிகளிலும் 90 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் பத்து வார டிஎஸ்எஸ் காலம் முழுவதும் 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் என்று அமைப்பாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.
துபாய் முழுவதும் உள்ள Majid Al Futtaim மால்கள், குடும்பங்கள், இளைஞர்கள், உணவுப் பிரியர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் அனுபவங்களின், பிரத்யேகமான கேளிக்கை மற்றும் அனுபவங்களை அளிக்கும்.
மேலும் படிக்க | அபுதாபி சம்மர் பாஸ்: ஆன்லைனில் விற்பனை துவக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR