அபுதாபி-கோழிக்கோடு விமானத்தில் தீ விபத்து: விளக்கம் அளித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
அபுதாபியில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் தீப்பிழம்புகள் காணப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இயந்திரக் கோளாறால் விமானத்தின் என்ஜின் ஒன்று தீப்பிடித்ததாக நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவிக்கிறது.
அபுதாபியிலிருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் தீபிடித்ததை அடுத்து பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த உடனேயே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அபுதாபியில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் தீப்பிழம்புகள் காணப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இயந்திரக் கோளாறால் விமானத்தின் என்ஜின் ஒன்று தீப்பிடித்ததாக நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவிக்கிறது.
" இன்ஜின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், அபுதாபி-கோழிக்கோடு வழித்தடத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 348, அபுதாபி விமான நிலையத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்படும்போது தொழில்நுட்பக் கோளாறு அடையாளம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த தீயை அணைத்து விமானத்தை சரி செய்வதற்கான அனைத்து செயல்முறைகளும் செய்யப்பட்டன. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர்” என ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியது. மேலும், விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிகழ்வு நெறிமுறைகளின்படி ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அபுதாபியில் இருந்து கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து, மீண்டும் அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கு முன்னர், ஜனவரி 23ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 45 நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | இந்திய பட்ஜெட் 2023 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சாதகமா? இல்லை பாதகமா?
விமான மேலாண்மை அமைப்பில் (FMS) தொழில்நுட்பக் கோளாறு உருவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “திருவனந்தபுரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு விமானம் புறப்பட்டு 9.17 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது.” என அதிகாரிகள் மேலும் கூறினர். டிசம்பர் 2022 இல், துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் பி-737 விமானம் கோழிக்கட்டில் இருந்து துபாய்க்கு திட்டமிட்டபடி புறப்பட்டு, துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானத்தில் பாம்பு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.
மேலும் படிக்க | NRI மைனர் பெயரில் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ