புதுடெல்லி: பிரிட்டிஷ்-இந்தியரான 42 வயதான இளைஞர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக மாறுவது இந்தியாவுக்கு மாபெரும் அடையாள மதிப்பைக் கொடுத்திருக்கலாம். இந்தியாவின் மருமகன், இன்ஃபோசிஸ் குடும்பத்தின் உறுப்பினர், தமிழகத்தின் மருமகன் என உறவு கொண்டாடலாம். ஆனால் உண்மையில் அவர் ஒரு என்.ஆர்.ஐ, பூர்வீக இந்தியர், இந்தியாவின் மருமகன் என்று அவரை இந்திய அடையாளத்துடன் தொடர்புபடுத்தி பார்ப்பது மட்டுமே உண்மையா? உண்மையில் அவரது பின்னணியும் பாரம்பரியமும் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷி சுனாக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டபோது நாட்டை விட்டு குடிபெயர்ந்தார். கென்யாவில் யஷ்வீர் சுனக் பிறந்தார். இவர் தான் ரிஷி சுனக்கின் அப்பா.


கென்யா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டனில் அடைக்கலம் ஆனார் யஷ்வீர் சுனக். டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான உஷாவை மணந்துகொண்டார் ரிஷி சுனக்கின் அப்பா யஷ்வீர் சுனக். இங்கிலாந்தில் பிறந்தார் ரிஷி சுனக்.


ரிஷி சுனக், இந்தியாவின் மருமகன் என்பது உண்மைதான்.ஆனால் அவர் இந்தியர் அல்ல, ஆஃபிரிக்காவின் மகன், ஆனால் ஆஃபிரிக்கர் அல்ல, பிரிட்டிஷ் குடிமகன், ஆனால் இங்கிலாந்தில் அவரை இந்தியர் என்கிறார்கள். இனத்தால் அவர் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட ரிஷி சுனக்கை யாரும் பாகிஸ்தானியாக கருதுவதில்லை. அப்படியென்றால் ரிஷி சுனக் யார்? உண்மையான க்ளோபல் சிட்டிசன் என்பதற்கு அடையாளமாக ரிஷி சுனக் இருக்கிறார். 


மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு 


இந்து மதத்தை பின்பற்றும் ரிஷி சுனக்கை பெரும்பாலானவர்கள், இந்து மதத்திற்குள் அடைத்துவிடுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் வளர்ந்து வரும் சக்தியை பிரதிபலிக்கும் நவீன உதாரணமாக ரிஷி சுனக்கை நாம் பார்க்கலாம். புலம்பெயர்ந்த இந்தியர்கள் கல்வி, வேலைகள் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில், அவர் பலரிடம் இருந்து மாறுபட்டவர்.


அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட இந்திய-அமெரிக்கர்கள், ஆளுநர்கள் என சர்வதேச அளவில் முக்கியமான அரசியல் பதவிகளில் பொறுப்பு வகிப்பவர்களும், வகித்தவர்களும் கிறிஸ்தவர்களாகவே இருப்பதை சுட்டிக்காட்டலாம். 


இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிஷி சுனக், பிரதமர் வேட்பாளராக பிரச்சாரம் செய்தபோது, ​​அவர் கிருஷ்ணரின் பிறந்தநாளில் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்வீட் செய்தார். இது அவர், தன்னை ஒரு இந்துவாக காட்டிக் கொள்வதில் தயங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, ரிஷி சுனக்கை இந்திய புலம்பெயர்ந்தோர் என்றே எடுத்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | இங்கிலாந்தை ஆளும் வம்சாவளி இந்தியர் ரிஷி சுனக்


ஒவ்வொரு ஆண்டும் ரிஷி சுனக் புனித இந்தியப் பண்டிகை தீபாவளியை பண்டிகையை கொண்டாடுவார். தற்போது, ஒரு தீபாவளி நாளில் அவர்  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் தற்செயல் நிகழ்வுதான்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஆறாவது நாடு இங்கிலாந்து ஆகும். இந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுனக் என்று சொல்வது இந்தியர்களுக்கு பெருமையானதாக இருக்கலாம். 


இந்திய வம்சாவளியினர் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கும் இந்த போக்கு, உலகின் பிற நாடுகளிலும் உள்ளது. தற்போது, உயர் பதவிகளை வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள்:


1. அன்டோனியோ கோஸ்டா, பிரதமர், போர்ச்சுகல்


2. முகமது இர்ஃபான், ஜனாதிபதி, கயானா


3. பிரவிந்த் ஜக்நாத், பிரதமர், மொரீஷியஸ்


4. பிருத்விராஜ்சிங் ரூபன், அதிபர், மொரீஷியஸ்


5. சந்திரிகாபர்சாத் சந்தோகி, தலைவர், சுரினாம்


6. கமலா ஹாரிஸ், துணைத் தலைவர், அமெரிக்கா


மேலும் படிக்க | UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!! 


உலகளவில் இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான "இந்தியாஸ்போரா" கருத்துப்படி, மொரீஷியஸில், திரு. ஜுக்நாத் மற்றும் திரு. ரூபன் உட்பட ஒன்பது நாட்டுத் தலைவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.


அதேபோல், சுரினாம், இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஐந்து ஜனாதிபதிகளைக் கண்டுள்ளது. கயானாவில் நான்கு நாட்டுத் தலைவர்களும், சிங்கப்பூரில் உள்ள மூன்று தலைவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்த நாடுகளைத் தவிர, டிரினிடாட் & டொபாகோ, போர்ச்சுகல், மலேசியா, பிஜி, அயர்லாந்து மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளும் இந்திய வம்சாவளித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ