வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது RBI: இனி அங்கிருந்தே இதை செய்யலாம்
BBPS: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!! நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தாலோ, அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்தாலோ, உங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு சிறந்த செய்தியை வழங்கியிருக்கிறது. ஆம், என்ஆர்ஐ-கள் இப்போது 'பாரத் பில் புக்தான் பிரனாலி' மூலம் நாட்டில் உள்ள தங்கள் குடும்பங்களின் மின்சாரம், தண்ணீர் கட்டணம் போன்ற தினசரி மயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.
ரிசர்வ் வங்கி இந்த தகவலை வழங்கியது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ரூபாய் டிராயிங் ஏற்பாட்டின் (ஆர்டிஏ) கீழ் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியை பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலம் பயனாளியின் கேஒய்சி இணக்க வங்கிக் கணக்கிற்கு மாற்ற அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Singapore New Work Permit Visa: சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய செய்தி
வெளிநாடுகளிலிருந்து கட்டணங்களை செலுத்தலாம்
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கையின் மூலம், என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களின் சார்பாக பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி மற்றும் பிற பில்களை செலுத்த முடியும் என்று தாஸ் கூறியிருந்தார்.
மூத்த குடிமக்களுக்கு பெரிய நன்மை
இப்போது இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தை (பிபிபிஎஸ்) பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு வாழ் இந்தியர்களான என்ஆர்ஐ-களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம், பில் செலுத்தும் முறைகளில் பயனர்களுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதில் பெரும் பணியை செய்துள்ளது என்றார்.
இப்போது இந்த அமைப்பு எல்லைக்கு அப்பால் இருந்தும் இன்வார்ட் பில் கொடுப்பனவுகளை ஏற்கும். இதன் மூலம் இனி வெளிநாடு வாழ் இதியர்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக அனைத்து பயன்பாடு, கல்வி மற்றும் பிற பில்களை செலுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்றார் அவர். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும். இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டில் தங்கியிருந்தாலும், நாட்டில் வசிக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மின் கட்டணம் முதல் பள்ளிக் கட்டணம் வரை பல வித கட்டணங்களை செலுத்த முடியும்.
மேலும் படிக்க | NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ