ரூபாய் மதிப்பு சரிவினால் ஃபெடரல் வங்கியின் என்ஆர்ஐ நிதிகள் இப்போது அதிகரித்துள்ளன. இந்திய ரெமிடன்சுகளில் 21 சதவிகித இந்தியப் பணப்பரிவர்த்தனைகள் இப்போது வங்கி மூலம் வருகிறது. கடந்த நிதியாண்டில் ரெமிடெண்சுகள் 1,40,000 கோடி ரூபாயை எட்டியுள்ளன. எனினும், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் பயன்பாடு இப்போது மாறிவிட்டது என்றும், முன்பெல்லாம், இந்தப் பணம் டெபாசிட்களாக வங்கியில் இருக்கும். ஆனால் இப்போது, சொத்துக்கள் மற்றும் நிதி வணிகங்கள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எர்ணாகுளம் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்த “டேக் ஆஃப் கேரளா” என்ற தலைப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ சீனிவாசன் உரையாற்றினார். வரும் காலாண்டுகளிலும் என்ஆர்ஐ-களின் பணம் அனுப்பும் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
கடன் வளர்ச்சி, கடந்த 8 முதல் 9 ஆண்டுகளில் முதல் முறையாக, 15-17 சதவீத வளர்ச்சியைக் கண்டது. இது ஊக்கமளிக்கும் வண்ணம் உள்ளது. மேலும், அனைத்துப் பிரிவுகளிலும் வளர்ச்சி நன்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட அதிக கடன்களைப் பெறுகின்றன என்று சீனிவாசன் கூறினார்.
மேலும் படிக்க | லக்ஷ்மண் நரசிம்மன்: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ
கோவிட்-19 இன் தாக்கம்
என்பிஏ-இல் கோவிட்-19 இன் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 2020 உடன் ஒப்பிடும்போது விகிதம் 100 அடிப்படைப் புள்ளிகளால் மேம்பட்டுள்ளதாக அவர் கூறினார். அரசாங்க நலத் திட்டங்கள் மற்றும் தடைக்காலங்கள் என்பிஏ-களைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவியது. ஆனால், தடைகள் வாபஸ் பெறப்படுவதால் அடுத்த ஆறு மாதங்கள் முக்கியமானதாக இருக்கும்.
பொருளாதாரத்தில் கோவிட் தாக்கம் குறித்து கேட்டதற்கு, சீனிவாசன், “நாம் ஒரு பலவீனமான உலகில் இருக்கிறோம் என்பதை கோவிட் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால், எல்லாவிதமான செயல்பாடுகளிலும் இயல்பு நிலையை மீட்டெடுத்த பிறகே நாங்கள் வெளியே வந்தோம். மக்களின் சகிப்புத்தன்மை காரணமாக, தொற்றுநோய் எதிர்பார்த்தபடி மோசமடையவில்லை. அதே நேரத்தில், எந்த சவால்களையும் வாய்ப்புகளாக மாற்ற கோவிட் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது”. என்று கூறினார்.
பணவீக்க போக்குகள்
அதிகரித்து வரும் பணவீக்கப் போக்குகள் குறித்த கேள்விக்கு, உலகளவில், அனைத்து வளர்ந்த சந்தைகளிலும் பணவீக்கம் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்றார். ஆனால் சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கியின் தலையீட்டின் காரணமாக, உலகப் போக்குகளில் இருந்து இந்தியா பெருமளவில் தனிமைப்படுத்தப்பட்டு, பொருளாதார மீட்சிக்கு வழி வகுத்துள்ளது என்றார் அவர்.
பணவீக்க விகிதங்களில் மேலும் அதிகரிப்பு இருக்கலாம். இது வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்கலாம். மேலும் இது இரண்டு காலாண்டுகளுக்குப் பிறகு சீராகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் பண்டிகை காலம் தொடங்குவது மேலும் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்பதால் பொருளாதாரம் சாதகமான அறிகுறிகளைக் காணலாம்.
மேலும் படிக்க | கனடா கல்லூரிகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்களுக்கு நீடிக்கும் சிக்கல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ