துபாயில் வசிக்கும் தமிழரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி உள்ளது. நீங்கள் வாங்கும் மளிகை பொருட்களில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி பெற முடியும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 9 முதல் 19 வரை டெய்ரா தீவுகளில் உள்ள நீர்முனை சூக் மற்றும் சந்தையான சூக் அல் மர்ஃபா அதன் மெகா மளிகை விற்பனையைத் தொடங்குகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் சிறந்த டீல்களைப் பெறலாம். வாராந்திர மளிகை மற்றும் உணவுப் பொருட்களில் இதன் மூலம் அதிகம் மிச்சப்படுத்தலாம். 


ஃபக்ருதீன், மொஹிதீன், ஃபால்கன், சாஃப்கோ, ஸ்பைர் இன்டர்நேஷனல், ஒமேகா ஸ்பைசஸ், ரஷித் ஷபீர் போன்ற 39 முக்கிய மொத்த விற்பனைக் கடைகளில் இருந்து மளிகை பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள், அரிசி, சோப்புகள், ஷாம்பு, துப்புரவுப் பொருட்கள் மற்றும் இன்னும் பல பொருட்களில் வாடிக்கையாளர்களுக்கு 50% வரை தள்ளுபடி கிடைக்கும். 


மேலும் படிக்க | UAE தொழிலாளர்களுக்கான மதிய இடைவேளை விதி; மீறினால் கடும் அபராதம் 


ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை சூக் அல் மர்ஃபாவின் வருடாந்திர மெகா சூக் விற்பனையும் நடக்கவுள்ளது. இதில், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வாசனை திரவியங்கள், தோல் பராமரிப்பு மற்றும் இன்னும் பலவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி பெறலாம். வாடிக்கையாளர்கள் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க, இதில் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு சில்லறை விற்பனையாளர்களின் பொருட்கள் இருக்கும். 


சூக் அல் மர்ஃபா-இன் புதிய செயல்பாட்டு நேரம் ஞாயிறு முதல் வியாழன் வரை நண்பகல் முதல் நள்ளிரவு வரை, வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மற்றும் சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஆகும்.


முன்னதாக, மே 27 முதல் 29 வரை, துபாய் மால், துபாய் மெரினா மால் மற்றும் துபாய் ஹில்ஸ் மால் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று நாட்களுக்கு நடந்த விற்பனையில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டன. இந்த விற்பனையில் ஃபேஷன் பிராண்டுகள், அழகு சாதன பிராண்டுகள் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​பிராண்டுகளில் மூன்று இடங்களிலும் தள்ளுபடிகள் கிடைத்தன. 


மேலும் படிக்க | சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ நிலையம், சுகாதார பாதுகாப்பு திட்டம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR