கொழும்பு: அன்னிய செலாவணி நெருக்கடியால் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் சரக்கு சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தது. இந்தியாவின் நான்காவது உதவி இதுவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் இரண்டாவது மிக நீண்ட மின்வெட்டு
இலங்கையில் வியாழன் அன்று 13 மணி நேர மின்வெட்டு ஏற்பட்டது, 1996 மின்சாரத் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் போது 72 மணிநேரத்திற்குப் பிறகு இரண்டாவது மிக நீண்ட மின்வெட்டு இதுவாகும். நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இந்திய டீசல் விநியோகம் ஓரளவு நிவாரணம் அளிக்கும் என அரச எரிபொருள் பிரிவான இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்


இந்தியா எரிபொருள் வழங்கியது


 



 


இந்தியா அனுப்பி வைத்த டீசல் மின்வெட்டு நேரத்தைக் குறைக்க உதவும் என்று சிலோன் மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் நேற்றைய மின்வெட்டு எட்டரை மணி நேரமாக குறைந்தது. இதனிடையே 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக வணிகர்கள் கப்பலில் ஏற்றி வருகின்றனர்.


அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விண்ணை எட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளன. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதத்திற்கு கீழ் குறைந்தததையடுத்து, அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இவை, நாணய மதிப்பிழப்பு ஏற்படுத்தியது மட்டுமின்றி உலகளாவிய கடன் வழங்குநர்களிடமும் உதவி கோர வழிவகுத்தது. 


இலங்கை தற்போது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு ஆகியவற்றுக்கான நீண்ட வரிசையில் இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR