Indo-Pak Relation: தாஷ்கண்டில் பிரதமர் மோடி - ஷாபாஸ் ஷெரீப் சந்திப்பு நடைபெறுமா...
பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் காஷ்மீர் தொடர்பான பிரச்சனையை பேசி வருகிறது.
பாகிஸ்தானில் பெரும் அரசியல் மாற்றத்திற்கு பிறகு, நாட்டின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். அவர் அண்டை நாடான இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஈடுபாட்டை காட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் ஷாபாஸ் பிரதமரானதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான செய்தி பாகிஸ்தான் தரப்பில் இருந்து வந்துள்ளது. விரைவில் இரு நாட்டு பிரதமர்களும் சந்திக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தலைவர்களும் தாஷ்கண்டில் சந்திப்பார்களா?
இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன, மேலும் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் SCO உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்திக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஜூலை 17 ஆம் தேதி, பிரதமர் மோடி மற்றும் ஷாபாஸ் ஷெரீப் இந்த கூட்டத்தில் தாஷ்கண்டில் பங்கேற்கலாம். இந்த சந்திப்பு வெற்றி பெற்றால், பிரதமர் மோடி பாகிஸ்தானில் உள்ள கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்லக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அப்போது, இஸ்லாமாபாத்தில் பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர் வரவேற்கலாம் என சில ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களின் சந்திப்பும் எல்லையில் நிலவும் சூழல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஸ்திரத்தன்மையை பொறுத்தே அமையும். பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மத்தியில் ராணுவ தளபதி பாஜ்வாவை பதவியில் இருந்து நீக்க விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பரிசாக வந்த நகையை விற்றாரா முன்னாள் பிரதமர்: புதிய சிக்கலில் இம்ரான் கான்
2015-ம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென லாகூர் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்னர் அவர் அப்போதைய பிரதமரும் ஷாபாஸ் ஷெரீப்பின் சகோதரருமான நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் சென்றடைந்தார். முன்னதாக 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 இல் பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 2019 உரி தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
இரு நாடுகளும் தங்கள் ராஜீய அதிகாரிகளை திரும்பப் பெற்றன, பின்னர் இந்தியா பாகிஸ்தானில் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் தூதரகத்தை இயக்கியது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இரு பிரதமர்களுக்கு இடையேயான சந்திப்பு அமையும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR