அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் பலி! மகள் மற்றும் விமானி படுகாயம்
NRI Tragedy: அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் மரணம்... அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்
அமெரிக்காவில் கிழக்கு ஃபார்மிங்டேலில் உள்ள ரிபப்ளிக் விமான நிலையத்தில் இருந்து மதியம் 2:18 மணிக்கு சிறிய விமானம் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் கிளம்பிய சிறிது நேரம் கழித்து கேபினில் புகை வந்ததாக விமானி தெரிவித்தார். விமானத்தில் இருந்த ஒரு இந்திய வம்சாவளி பெண் மற்றும் விமானி பயிற்றுவிப்பாளர் காயமடைந்தனர். உயிரிழந்த பெண் 63 வயதான ரோமா குப்தா மற்றும் அவரது மகள் 33 வயதான ரிவா குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதான பைசுல் சவுத்ரி என்ற பைலட்டை சஃபோல்க் கவுண்டி போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
விமானம் புறப்பாடு
மூன்று பேருடன் கிழக்கு ஃபார்மிங்டேலில் உள்ள ரிபப்ளிக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுற்றுலா விமானம் இது என்று தெரிய வந்துள்ளது. ஒற்றை எஞ்சின் பைபர் செரோகி விமானத்த்தில் விபத்து ஏற்பட்டது.
கேபினில் புகை
விமானத்தின் கேபினில் புகை வருவதாக விமானி அறிவித்தார், அதை அவர் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு ரேடியோ மூலம் தகவல் அனுப்பினார்.
பிற்பகல் 3 மணியளவில் வடக்கு லிண்டன்ஹர்ஸ்டில் உள்ள வெல்வுட் அவென்யூ மற்றும் ஐந்தாவது தெரு சந்திப்பிற்கு அருகே விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாக விமானம் அவசரமாக தரையிறக்க விமான நிலையத்தை நோக்கி திரும்பியதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களைத் தவிர, தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், எந்த வீட்டுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ