தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ‘துபாய் புள்ளிங்கோ’ நடத்திய தமிழர் திருவிழாவாம் பொங்கல் தின கொண்டாட்டம் அல் கிஸ்ஸஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லாம் பார்க் (woodlem Park) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கோலாகலமாக இந்த விழா கொண்டாடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குத்து விளக்கு ஏற்றப்பட்டு, சக்கரை பொங்கல் பொங்க வைத்து நிகழ்ச்சிகள் தொடங்கின. குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியாவில் இருந்து வருகை தந்த விஜய் டிவி நகைச்சுவை கலைஞர்கள் அறந்தாங்கி நிஷா மற்றும் கெபிஒய் குரேசி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை உற்பத்தி செய்வதில் தீவிரம்


மேலும் இந்த பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரேடியோ கில்லி 106.5 FM உரிமையாளர் கனகராஜ், TEPA நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், அன்வர் குரூப்ஸ் ஆப் கம்பெனியின் நிறுவனர் அன்வர், துபாய் ஈமான் கலாச்சார மையம் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், TAM குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனர் ஷாநவாஸ், பெருமாள் பிளவர்ஸ் உரிமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இவர்களைத் தவிர, E-2 Energy உரிமையாளர் ராஜா, காரம் சாரம் உணவகத்தின் உரிமையாளர், இத்ரீஸ் ட்ராவல் ஏஜென்சி, கார்ஸ் அரேபியா, கிரீன் குளோபல் முனைவர் ஜாஸ்மின், சல்வா இன்டர்நேஷனல் உரிமையாளர், 7 சிட்டி, அவர் பெஸ்ட் ஃபேர் டிராவல்ஸ், Wardat Al safa உரிமையாளர் வகிதா, செய்தியாளர் அஸ்கர் அலி, எல்லா தமிழ் ( Yalla Tamil) ரவுப் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியை துபாய் புள்ளிங்கோ ஆன்ட்ரியா மற்றும் சமீர் தொகுத்து வழங்கினர். துபாய் புள்ளிங்கோ அய்யாஸ், ஷாநவாஸ் மற்றும் குழுவினர் சிறப்பாக நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்று நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர்.


மேலும் படிக்க | மண்பானையில் பொங்கல் வைத்திட வலியுறுத்தும் கல்லூரி மாணவர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ