புதுடெல்லி: இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. நமது அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு குடிமக்களுக்கு தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாக உள்ளது. கேஒய்சி உட்பட தங்கள் சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு பொது மற்றும் தனியார் அதிகாரிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இந்தியர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்பது நமக்குத் தெரியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா? இது பல என்ஆர்ஐ-களின் மனதில் உள்ள ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுஐடிஏஐ ஆதார் FAQ-ன் படி, இதன் பதில் ‘ஆம்’. முறையான இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்ட என்ஆர்ஐ (சிறுவயதினர், பெரியவர்கள்) எந்த ஆதார் மையத்திலிருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 


ஒரு என்ஆர்ஐ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? இதற்கான படிப்படியான செயல்முறையை UIDAI வழங்கியுள்ளது.  


NRI ஆதார் விண்ணப்பத்திற்கான செயல்முறை என்ன?


- உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்லவும். 


- இந்திய பாஸ்போர்ட்டை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்


- பதிவு படிவத்தில் விவரங்களை நிரப்பவும்


மேலும் படிக்க | ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய NRI-கள் தேர்ந்தெடுக்கும் டாப் நகரங்கள் 


- வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னஞ்சல் ஐடியை வழங்குவது கட்டாயமாகும்


- என்ஆர்ஐ என்ரோல்மெண்டுக்கான டிக்லரேஷன் சற்று வித்தியாசமானது. உங்கள் பதிவுப் படிவத்தில் அதைப் படித்து கையொப்பமிடுங்கள்


- உங்களை NRI ஆக பதிவு செய்யும்படி ஆபரேட்டரிடம் கேளுங்கள்


- உங்கள் பாஸ்போர்ட்டை அடையாளச் சான்றாகக் கொடுங்கள்


- பயோமெட்ரிக் கேப்சர் செயல்முறையை முடிக்கவும்


- ஆபரேட்டரைச் சமர்ப்பிக்க அனுமதிக்கும் முன் திரையில் உள்ள அனைத்து விவரங்களையும் (ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில்) சரிபார்க்கவும்


- உங்களின் 14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி & நேர முத்திரையைக் கொண்ட ஒப்புகை சீட்டை/பதிவு சீட்டை பெற்றுக்கொள்ளவும். 


நீங்கள் பதிவுசெய்ததும், https://resident.uidai.gov.in/check-aadhaar என்ற இணையதளத்திலிருந்து உங்கள் ஆதார் அட்டையின் நிலையைச் சரிபார்க்கலாம். உங்கள் பாஸ்போர்ட்டையே முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாகப் பயன்படுத்தலாம் அல்லது இதற்கு வேறு ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணங்களையும் வழங்கலாம் என UIDAI கூறுகிறது. இருப்பினும் பாஸ்போர்ட்டில் உள்ள உங்கள் முகவரி புதியதாக புதுப்பிக்கப்பட்டிருந்தால், UIDAI ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியலின்படி, சரியான துணை ஆதாரத்துடன் (PoA) புதுப்பிக்கப்பட்ட இந்திய முகவரியை நீங்கள் கொடுக்க வேண்டும்.


மேலும் படிக்க | வெளிநாடுவாழ் இந்தியரா நீங்கள்? உங்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ