உலக அளவில் இருந்த நிதிநிலை மந்தநிலை அச்சுறுத்தலுக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியா பிரகாசமான நட்சத்திரமாக இருப்பதாக கூறியுள்ளது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (NRI), பல முதலீட்டு விருப்பங்கள் மற்றும் காலமுறை வருமானம் உருவாக்கும் கருவிகள் உள்ளன. அவை அவற்றின் தனித்துவமான பலன்களுடன் வருகின்றன. பண்டிகை காலம் வருவதால், முதலீடுகள் குறித்த திட்டங்களை தீட்டுவதற்கு இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது.
என்ஆர்ஐ முதலீட்டாளர்களுக்கு சிறந்த பொருத்தமான முதலீட்டு விருப்பத்தைப் பற்றி பேசிய ஹெச்பிட்ஸ் நிறுவனர் ஷிவ் பரேக், ஒருவரது முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் திறன், வருவாய் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பொறுத்து ஒருவரது முதலீடு அமையும் என்று கூறியுள்ளார். "மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, நீண்ட கால முதலீடுகளைப் பார்ப்பவர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும். முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தில் மூலதன ஆதாயங்களைச் செலுத்த வேண்டும். இந்தியாவில் குடியேற திட்டமிட்டால் என்பிஎஸ் முதலீடு நல்லதாக கருதப்படுகின்றது. ஓய்வுக்குப் பிந்தைய ரியல் எஸ்டேட்டைப் பொறுத்த வரையில், சாதகமான கொள்கைத் தலையீடுகள் நிலையான வளர்ச்சியைக் குறிக்கின்றன. மேலும் நீண்ட காலத்திற்கு இது ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இலங்கை பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் அதிகரிக்கும் இலங்கை அகதிகளின் வரத்து
NRI-களுக்கான ஐந்து முதலீட்டு விருப்பங்கள் இதோ:
ரியல் எஸ்டேட்: ரியல் எஸ்டேட் துறை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு துறையாக காணப்படுகின்றது. சந்தை அளவில் $1 டிரில்லியன் அடையும் பாதையில் இது உள்ளது. குடியிருப்பு மற்றும் வணிக ரியல் எஸ்டேட் (CRE) இரண்டும் ஒரு முக்கிய முதலீட்டு விருப்பமாக உள்ளது. வணிகச் சொத்துகள், அவை இருக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து 5 முதல் 10 சதவீதம் வரை வளரும், எனவே இது ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாக இருக்கும்.
"REITகள் மற்றும் பகுதியளவு உரிமைகள் போன்ற அதிக அணுகக்கூடிய கருவிகள் CRE துறைக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன. இந்த கருவிகள் சந்தையை சில்லறை முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியுள்ளன. வணிகச் சொத்தின் வாடகை வருமானம் ஆண்டுக்கு 8%-10% ஆகும். இது குடியிருப்பு சொத்து மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாகும்" என்று பரேக் கூறினார்.
மியூசுவல் ஃபண்டுகள்:
நீண்ட கால முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு எப்போதும் மியூசுவல் ஃபண்டுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள் கடன் முதல் ஈக்விட்டி வரை பரந்த அளவிலான முதலீட்டு விருப்பங்களை வழங்குகின்றன. மேலும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, என்ஆர்ஐக்கு என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கு தேவை. ஏனெனில் இதில் அவர்கள் இந்திய ரூபாயில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
யூலிப்:
ULIP ஆனது முதலீடு மற்றும் காப்பீட்டின் பலன்களை ஐந்தாண்டுகளுக்கான பொதுவான லாக்-இன் காலத்துடன் ஒருங்கிணைக்கிறது. இருப்பினும், ULIP களுக்கு செலுத்தப்படும் பிரீமியம்கள் வருமான வரிச் சட்டம், 196 இன் பிரிவு 80C மற்றும் 10(10D) இன் கீழ் கழிக்கப்படும்.
NPS:
என்.பி.எஸ்., பணி ஓய்வுக்குப் பிறகு இந்தியாவில் குடியேற வேண்டும் என்ற இலக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே இது முதலீடாக பரிந்துரைக்கப்படுகிறது. அரசாங்கப் பத்திரங்களைப் பொறுத்தவரை, அவை இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் குறைந்த ஆபத்து முதலீடுகள். அரசாங்கப் பத்திரங்கள் வர்த்தகம் செய்யக்கூடிய பத்திரங்கள் ஆகும். வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் சந்தையில் அவற்றின் விலைகள் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டவை.
பிக்ஸ்ட் டெபாசிட்:
நிலையான வைப்புத்தொகைகள் எனப்படும் எஃப்டி இந்தியர்கள் மத்தியில் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் பிரபலமாக உள்ள முதலீட்டு ஆப்ஷனாகும். இது ரிஸ்க் இல்லாத முதலீடாக இருப்பதோடு, வெவ்வேறு தவணைக்கால விருப்பங்களுடனும் வருகிறது. உத்தரவாத வருமானம் தவிர நெகிழ்வுத்தன்மையையும் இது அனுமதிக்கிறது. NRIகள் NRE, NRO அல்லது FCNR கணக்குகள் மூலம் FD களில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இது அவர்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும்.
மேலும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ