நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு மிகவும் தேவையான சில நிவாரணங்களை வழங்க உலகம் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் டாக்டர் ஷம்ஷேர் வயலில் இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்காக ரூ.11 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். அவரது இந்த தாராள, மனிதாபிமான குணத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“இப்பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் நிறுவனத்திடம் இந்த உதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மருந்து மற்றும் பிற பொருட்களை வழங்குதல், வீடுகளை இழந்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மீட்பு முயற்சிகளுக்காக பயன்படுத்தப்படும்." என்று விபிஎஸ் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


"இந்த நன்கொடை நிவாரணப் பணிகளுக்கு உதவி வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். பேரழிவு தரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவரது நிலைமையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. மேலும் இந்த பங்களிப்பு அவர்களின் தேவைகளை ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று பர்ஜீலின் ஹோல்டிங்ஸ் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஷம்ஷேர் கூறினார். 


டாக்டர் வயலிலும் அவரது நிறுவனமும் இதற்கு முன்னர் பல குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம் இயற்கை பேரிடர்களின் போது சமூகங்களுக்கு உதவியிருக்கிறார்கள்.


டாக்டர் வயலில் வழங்கியுள்ள மற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்


- 2018 ஆம் ஆண்டில், நிபா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் அந்த ஆண்டு வெள்ளத்தின்போதும் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு உதவுவதற்காக மருத்துவப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பினார்.


- புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டத்தையும் அவர் தொடங்கினார். அதில் மாநிலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மாதிரி குடும்ப சுகாதார மையமாக மீண்டும் கட்டியெழுப்பினார்.


- மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் வணிக அதிபரான வாரன் பஃபெட் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தி கிவிங் ப்லெட்ஜில் அவர் இணைந்தார்.


- 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா போராடியபோது, தகுதியின் அடிப்படையில் கதிரியக்க நிபுணரான டாக்டர் வயலில், மனேசரில் உள்ள 500 படுக்கை வசதிகள் கொண்ட விபிஎஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் மீடியோர் மருத்துவமனையை அரசாங்கத்திற்கு வழங்கினார். பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலவசமாக இதில் அனுமதிக்கப்பட்டனர். 


மேலும் படிக்க | Turkey earthquake: 90 மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 10 நாள் குழந்தை! 


துருக்கியில் இந்தியாவின் ‘ஆபரேஷன் தோஸ்த்’


‘ஆபரேஷன் தோஸ்த்’-ன் கீழ், இந்தியா துருக்கிக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வடிவில் உதவிகளை வழங்கி வருகிறது.


NDRF உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து இடிபாடுகள் வழியாக உயிர் பிழைத்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைத் தேடி வருகிறது. அதே நேரத்தில் இந்திய இராணுவம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கள மருத்துவமனையை இயக்குகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா 7 கோடி ரூபாய் மதிப்பிலான அவசரகால நிவாரணப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களை அனுப்பியது.


பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டக்கூடும்


ஒரு நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகின்றது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,000ஐ எட்டியுள்ளது. இதற்கிடையில், இப்பகுதியில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | துருக்கி நிலநடுக்கம்! வாட்ஸ்அப் ஸ்டேடஸால் இடிபாடுகளில் இருந்த மீட்கப்பட்ட நபர்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ