துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8500 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் தற்போதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. இதனால், உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கபப்ட்டிருந்த சிரியாஅகதிகளின் நிலைமை நிலநடுக்கத்திற்கு பிறகு பரிதாபமானதாக மாறிவிட்டது.
தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவின் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அகதிகளுக்கு மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துருக்கியில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா
ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கு மத்தியில், புயலுக்கு மத்தியில் பூவாய் பூத்துள்ளது ஒரு பிஞ்சுக்குழந்தை என்பது இயற்கையின் நகைமுரண்களில் ஒன்று. கர்ப்பிணித்தாய், நிலநடுக்கத்தில் குழந்தையை பிரசிவித்தார். குழந்தை பிறந்தது, ஆனால், தாய் உயிரிழந்துவிட்டார்.
அதேபோல, எங்கும் அவலக்குரலும், பதைபதைப்பும் நிலவும் கடுமையான சூழலில், மீட்புப்பணிகள் மூலம், உயிர் பிழைத்தவர்களின் ஆசுவாசத்தையும் பார்க்க முடிகிறது.
நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டவர்களின் வீடியோ காட்சிகள் பார்ப்போர் மனதை வாட்டுகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோக்களில் ஒரு பெண் மீட்கப்படும் வீடியோ வைரலாகிறது, மத்திய - கிழக்கு மாகாணமான சான்லியுர்ஃபாவில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பெண்ணை, அந்நாட்டின் மீட்புப் படையினர் அந்த பகுதி மக்கள் உதவியுடன் 22 மணிநேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஒருவழியாக பலூனை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா... அடுத்தது என்ன?
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் மற்றும் அதன்பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகிவருகின்றன. அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், மழை மற்றும் பனியுடன் மக்கள் போராடுவதையும், மலைபோல் குவிந்திருக்கும் சிதைபாடுகளுக்கு மத்தியில் மக்கள் உதவிக்காக அழும் அவலத்தையும் அழுகுரலையும் காட்டுகிறது.
குளிர்காலத்தின் பனி நிறைந்த அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், சைப்ரஸ், லெபனான் என அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று சொல்லும் அளவுக்கு பாதிப்புகளை நிபுணர்கள் எடைபோடுகின்றனர் என்பதால், தற்போது வந்திருக்கும் தரவுகள் மிகவும் குறைவானதாகவே இருக்கும் என்றும், பாதிப்பின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் 7 நாள் தேசிய அளவில் துக்கம் அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் படிக்க | நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் மீட்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ