10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI சேவை!!
UPI for NRI: யுபிஐ கான்செப்ட் நேபாளம், சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது என MeitY செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா கூறினார்.
இந்த ஆண்டு டிஜிட்டல் கிரெடிட் அறிமுகப்படுத்தப்படும்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) அறிமுகப்படுத்தியதைப் போலவே இந்த ஆண்டு டிஜிட்டல் கிரெடிட் வசதியையும் வழங்குவதாக அரசாங்கம் கூறியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இதன் மூலம் சாதாரண தெரு விற்பனையாளர்கள் முதல் பெரிய அங்காடிகள் வரை அனைவருக்கும் பலன் கிடைக்கும். சிறிய கடைகளில் வணிகம் செய்பவர்களும் வங்கிகளிடமிருந்து கடன் பெற இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியும்.
10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) UPI சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
- இந்த ஆண்டு மற்றும் அடுத்த 10 முதல் 12 மாதங்களில் டிஜிட்டல் கிரெடிட் முறையை அறிமுகம் செய்வதில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய பங்கு வகிக்கும்.
- "டிஜிட்டல் பேமெண்ட்ஸ் உத்சவ்" நிகழ்ச்சியில் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் கிரெடிட்டுக்கான உறுதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று கணித்தார்.
- இந்த நிகழ்வில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) UPIக்கான குரல் அடிப்படையிலான கட்டண முறையின் முன்மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- மக்கள் தங்கள் தாய்மொழியில் தொலைபேசியில் பணம் செலுத்துவதற்கு UPI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்.
- இந்த சேவை 18 இந்திய மொழிகளில் வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | துபாயில் விண்ணைத் தொடும் வீட்டு வாடகை: ஒவ்வொரு ஆண்டும் ஏற்றம் இருக்குமா?
யுபிஐ சேவைகளின் விரிவாக்கம்:
- பத்து நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐகளுக்கு) யுபிஐ சேவைகளை விரிவுபடுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
- யுபிஐ கான்செப்ட் நேபாளம், சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது என MeitY செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா கூறினார். மேலும் யுபிஐ உலகளாவிய கட்டண முறைமையாக மாற வேண்டும், இதற்காக NPCI ஏற்கனவே இந்த நாடுகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
- இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த வார தொடக்கத்தில், இந்தியாவிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு வணிக தேவை கட்டணங்களுக்கு UPI ஐப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறியது.
- டிசம்பரில் UPI பரிவர்த்தனைகள், சாதனை அளவான 12.82 லட்சம் கோடியை எட்டின.
சமீபத்தில், என்பிசிஐ ஆனது யுபிஐ சேவைகளை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRIs) நீட்டிக்க ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
10 ஜனவரி 2023 அன்று ஒரு செயல்பாட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்காக அவர்களின் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தலாம் என்ற அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது, என்ஆர்ஐ-கள் மத்தியில் யுபிஐ-யின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். மேலும் இந்திய எண்ணைப் பெறாமலேயே தங்கள் இந்திய வங்கிக்கணக்குகளிலிருந்து இந்திய வணிகர்கள் மற்றும் பிறருக்கு பணம் செலுத்த இது உதவும்.
மேலும் படிக்க | UAE Residency Visa: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய மாற்றங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ