துபாயில் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு இக்கட்டான நிலைமை வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் துபாயில் வாடகை உயர்வு வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அது இந்த ஆண்டும் தொடர்கிறது. வாடகை வீடுகளில் இருப்பவர்கள் இந்த ஆண்டு வாடகையில் 15 முதல் 20 சதவிகித அதிகரிப்புக்கான அறிவிப்புகளைப் பெற்று வருகின்றனர்.
வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு இந்த போக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், அவர்களைப் பாதுகாக்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை நிறுவனமான RERA, வாடகைக் கால்குலேட்டர் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறைந்த வாடகை கொண்ட வீடுகள் உள்ள பகுதிகளும் துபாயில் உள்ளன என்றும் அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
எஜாரி ஒப்பந்தத்தின் பொதுவான கால அளவு 12 மாதங்கள் என்றும், RERA கால்குலேட்டருக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் வாடகையை அதிகரிக்க ஒரு வீட்டு உரிமையாளருக்கு உரிமை உண்டு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
துபாய் நிலத் துறை இணையதளத்தில் கிடைக்கும் தகவலின்படி, வாடகை முறை எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்கலாம்:
- சந்தை மதிப்பை விட வாடகை 10 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகரிப்பு இருக்காது.
- வாடகை 11-20 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகபட்ச அதிகரிப்பு 5 சதவீதம் வரை இருக்கலாம்.
- வாடகை 21-30 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகபட்ச அதிகரிப்பு 10 சதவீதம் வரை இருக்கலாம்
- வாடகை 31-40 சதவீதம் குறைவாக இருந்தால், அதிகபட்ச அதிகரிப்பு 15 சதவீதம் வரை இருக்கலாம்.
- வாடகை 40 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அதிகபட்ச அதிகரிப்பு 20 சதவிகிதம் வரை இருக்கலாம்.
மேலும் படிக்க | UAE Residency Visa: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய மாற்றங்கள் https://zeenews.india.com/tamil/nri/nri-news-7-main-changes-you-need-to-...
பெரிய அளவில் சேமிக்க 5 டிப்ஸ்:
துபாயில் வாடகை வீடுகளில் இருப்பவர்கள் பணத்தை மிச்சப்படுத்த இந்த வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
- மையப் பகுதிகளிலிருந்து வெளியேறுங்கள்:
இது வாடகையைச் சேமிக்க உதவும். இதற்கு இருப்பிடத்தில் சிறு தியாகங்களை செய்ய வேண்டி வரும்.
- சமரசம்:
துபாயின் மையப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், அப்போது, ஆடம்பர வீடுகளை தவிர்த்து, சொகுசு அம்சங்கள் குறைவாக உள்ள வீடுகளை தேர்ந்தெடுத்தால், அதில் சிறிது சமரசம் செய்துகொண்டால், பணத்தை மிச்சப்படுத்தலாம்.
- பேச்சுவார்த்தை:
தற்போது உள்ள வாடகை நிலவரம் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு, வீட்டு உரிமையாளரிடம் நன்றாக பேரம் பேசுங்கள்.
- காசோலைகள் மற்றும் வாடகைத் தள்ளுபடிகள்:
நீங்கள் முன்பே பணம் செலுத்த முடியும் என்றால், பல மாதங்களுக்கான தொகையை ஒன்றாக செலுத்தி, அதற்கு பதிலாக வாடகையை குறைத்து பேரம் பேசலாம்.
- வீட்டு உரிமையாளருடன் நல்ல உறவைப் பேணுங்கள்:
வீட்டு உரிமையாளருடன் எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பது வீட்டில் வாடகைக்கு இருப்பவருக்கு எப்போதும் நல்லது. உங்கள் தரப்பிலிருந்து எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருந்தால், உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கக்கூடும்.
மேலும் படிக்க | அமீரகம் வாழ் தமிழர்களுக்கு முக்கிய செய்தி: பல்கலைக்கழக சேர்க்கை விதிகளில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ