பிரிட்டனில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பிரிட்டனுக்கு அழைத்து வருவது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. சில குறிப்பிட்ட கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களை வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற உடனடி குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரலாம் என்பது தொடர்பான நிபந்தனை விதிக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் படிக்கும் சர்வதேச மாணவர்கள் மட்டுமே தங்களை சார்ந்திருப்பவர்களை பிரிட்டனுக்கு அழைத்து வரலாம் என விறைவில் பிரிட்டன் நிபந்தனை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முதுகலை பட்டம் அல்லது பிஎச்.டி போன்ற உயர் கல்வி படிக்காத, வெளிநாட்டு மாணவர்கள் குடும்பங்களை அழைத்து வர தடை விதிக்கப்படலாம் என்று அறிக்கை ஒன்று கூறியது.


படிப்பத்தற்காக பிரிட்டன் வரும் வெளிநாட்டு மாணவர்கள்,  பின்னர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரும் நபர்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. குடிவரவு புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 லட்சம் மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. அவர்களை சார்ந்த வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் என  135,788 பேர்,  பிரிட்டனுக்கு வந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 16,047 ஆக இருந்தது.


இவர்களில், இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற மாணவர்களின் உறவினர்கள் 33,240 பேர் உட்பட 161,000  இந்திய மாணவர்கள் பிரிட்டன் சென்றுள்ளனர். மேலும், 160,000 க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர் தங்கள் விசா விண்ணப்பங்களின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்குரிய விஷயத்தில் அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. உள்துறை செயலாளர் சூல்லா பிராவர்மேன், பிரிட்டனின் குடியேறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். இதில் வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் தங்கக்கூடிய காலத்தை குறைப்பதையும் உள்ளடக்கியது.


மேலும் படிக்க | NRI மாணவர்களுக்கு சூப்பர் செய்தி: நீங்களும் CUET UG 2023-க்கு விண்ணப்பிக்கலாம்


இருப்பினும், கல்வித் துறை இது குறித்து கூறுகையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது இங்கிலாந்து பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் என்றும்,  வெளிநாட்டு மாணவர்கள் தான் அவர்களது வருமானத்திற்கான ஆதாரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பீடுகளின்படி, சர்வதேச மாணவர்கள் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 35 பில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் வருமானம் தருகின்றனர்.


இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு 10,000 பவுண்டுகள் முதல் 26,000 பவுண்டுகள் கட்டணம் மூலம் மட்டுமல்லாமல்,  ஒரு நபருக்கு NHS சர்சார்ஜ் கட்டணமாக மாணவருக்கு ஆண்டுக்கு 400 பவுண்டுகள் என்ற அளவிலும், அவரை சார்ந்திருக்கும நபருக்கு  600 பவுண்டுகள் என்ற வழியிலும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.


பட்டதாரிகளுக்கான பணி விசாக்களில் தடைகள் விதிக்கப்பட்டால், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு செல்ல தொடங்கி விடுவார்கள் எனவும் அரசுக்கு எச்சரித்க்கு கல்வித் துறை, இறுதியில் இங்கிலாந்தில் மாணவர்கள் சேருவது குறைந்து பெரிய அளவில் பாதிப்பு உண்டாகலாம் எனவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | UPI- PayNow: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ