முத்தூட் ஃபைனான்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. என்ஆர்ஐகள், இந்தியாவில் வாங்கிய நகைக்கடனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவணையை செலுத்தலாம். இதற்காக, முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட லுலு இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான NRI களுக்கு வசதி மற்றும் பணப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பணமானது கணிசமான அளவில் இருப்பதால், உலகிலேயே அதிக பண பரிமாற்றத்தை வெளிநாடுகளில் இருந்து பெறும் நாடாக இந்தியா உள்ளது.


மேலும் படிக்க | அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்... கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!


கூட்டாண்மையின் நன்மைகள்
தங்கக் கடனைப் பெற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சிறப்புக் கட்டணத்தில் தங்கக் கடன் தவணைகளைச் செலுத்துவதற்கான வழி கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள லுலு எக்ஸ்சேஞ்சின் 89 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் NRIகள் சேவையைப் பெறலாம்.


கடனுக்கான தவணை நிகழ்நேர அடிப்படையில் செலுத்தப்படும். நகைக்கடன் கொடுத்த இந்தியாவில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளைகளுக்கு லுலு மனி டிஜிட்டல் மூலம் பணம் அனுப்பிவிடும். இந்த புதிய தீர்வு மூலம், விரைவான மற்றும் நம்பகமான பணப் பரிமாற்றம் நடைபெறும் என்பதோடு, கடன் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்படாது. 


மேலும் படிக்க | சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு போலி செய்தி வெளியிட்டவருக்கு $965 மில்லியன் அபராதம்


மேலும், இந்தியாவில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸின் 4600க்கும் மேற்பட்ட கிளைகளின் பரந்த வலையமைப்புடன், பயனாளிகள் தங்கள் எந்தக் கிளையிலும் தங்கள் கடன் கணக்குகளுக்கு பணத்தைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


வெளிநாட்டு வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இருந்து பெறப்படும் பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில், உலகளாவிய நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டாண்மையானது எல்லை தாண்டிய திருப்பிச் செலுத்தும் அனுபவத்தை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மேம்படுத்தும். மூலோபாய வணிக கூட்டாண்மை மூலம், NRIகள் லுலு எக்ஸ்சேஞ்ச் கிளைகளைப் பயன்படுத்தி முத்தூட் ஃபைனான்ஸிலிருந்து நகைக் கடனைப் பெற்ற தங்கள் உறவினர்களின் தவணைகளைத் திருப்பிச் செலுத்தலாம்.


முத்தூட் ஃபைனான்ஸ் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் நகைக்கடன்களை, வீட்டிற்கே சென்று கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.  .


மேலும் படிக்க | மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ