வாட்டர்பரி: போலிச் செய்திகள் தொடர்பாக அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவருக்கு, $965 மில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 79,39,49,40,750 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2012ம் ஆண்டில் நடைபெற்ற சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அமல்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்ட அரசாங்கத்தின் சதி என்று அலெக்ஸ் ஜோன்ஸ் தனது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அந்தத் தாக்குதல் 100 சதவீதம் உண்மையானது என்று ஒப்புக்கொண்டார் அலெக்ஸ் ஜோன்ஸ்.
2012 சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் பலியானார்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு $965 மில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 79,39,49,40,750 ரூபாய் அளவிலான இழப்பீட்டுத் தொகையை பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரான அலெக்ஸ் ஜோன்ஸ் வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு InfoWars இன் நிறுவனர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு $49.3 மில்லியன் செலுத்த உத்தரவிட்டிருந்தது. டெக்சாஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, தற்போது வந்துள்ள இரண்டாவது இழப்பீடு வழங்கும் தீர்ப்பகும். ஜோன்ஸ் செலுத்த வேண்டிய இரண்டாவது தவணை நஷ்டஈடு $965 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்... கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!
கனெக்டிகட் மாகாணத்தின் வாட்டர்பரி நடுவர் தீர்பாயத்தில், மூன்று வார விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அமல்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்ட அரசாங்கத்தின் சதி என்று அரசு மீது ஜோன்ஸ் புகார் கூறிவந்தார்.
கடந்த வாரம் நடந்த நீதிமன்ற விசாரணையின்போது சாட்சியம் அளிக்கும்போது இறுதிச் சுற்றில், ஜோன்ஸ் உணர்ச்சிவசப்பட்டு, "நான் ஏற்கனவே நூற்றுக்கணக்கான முறை மன்னிக்கவும், மன்னிக்கவும் என்று சொல்லி முடித்துவிட்டேன்" என்று கூறி கண்ணீர் விட்டார். ஆனால் அவரது கண்ணீரால் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் மன்றம் நெகிழ்ந்து போகவில்லை.
மேலும் படிக்க | NRI டாக்டர் விவேக் மூர்த்திக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை
ஜோன்ஸின் பிரச்சனைகள் இரண்டாவது இழப்பீட்டை வழங்கினாலும் முடிந்துவிடாது. சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, இந்த ஆண்டு இறுதியில் டெக்சாஸில் நடைபெறும் மூன்றாவது அவதூறு விசாரணையை அவர் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக, ஜோன்ஸ் தனது இன்ஃபோவார்ஸ் வலைத்தளத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க பொய்களைச் சொல்லிவந்தார். இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், InfoWars நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃப்ரீ ஸ்பீச் சிஸ்டம்ஸ், அமெரிக்காவில் தாங்கள் திவாலாகிவிட்டதாக மனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ