சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் உட்பட 2 பேருக்கு காவல்துறை சிறப்பு விருது
சிங்கப்பூரில் பொது மக்களுக்காக சுய நலம் கருதாமல் பொது நலத்துடன் சேவை செய்த 6 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தை, நாட்டை காக்க அரசாங்கம், காவல்துறை என பல அமைப்புகள் இருந்தாலும், பொதுமக்களும் முழு விழிப்புணர்வுடனும் பிறருக்கு உதவும் எண்ணத்துடனும் இருப்பது அவசியமாகும்.
பெரும்பாலான நாடுகள் இப்படிப்பட சமூக அக்கறை கொண்ட குடிமக்களுக்கு அவ்வப்போது பல வித விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், சிங்கப்பூரில் பொது மக்களுக்காக சுய நலம் கருதாமல் பொது நலத்துடன் சேவை செய்த 6 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 3 அமைப்புகளுக்கும் ஒரு ஊழியருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தன்னலம் கருதாமல் இவர்கள் பிறருக்கு செய்த உதவிகள் பாராட்டப்பட்டன.
முதல் சம்பவமாக, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு, உலு பாண்டன் பார்க் கனெக்டரில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக மானபங்கம் செய்ய முயன்ற ஒருவரை பிடிக்க காவல்துறையுடன் இணைந்து உதவியதற்காக திரு வினோத் ராஜேந்திரன் மற்றும் திருமதி ரமிசா பானு அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | இந்தியாவைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது
மற்றொரு சம்பவத்தில், 72 காமன்வெல்த் அவென்யூவில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்க உதவிய திரு. அழகர் ரவிக்கும், ஒரு கடையில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்கக் காவல்துறைக்கு உதவிய திரு. முகமது ஷுபானுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், மற்றொரு சம்பவத்தில், பாதுகாப்பு இடைவெளி அதிகாரி ஒருவரிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டு, வன்முறையில் ஈடுபட்ட நபரை கட்டுப்படுத்த உதவிய திரு. இங் ஷெங் சாவ் பெனடிக்ட்டுக்கு விருது வழங்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட ஒரு நபரைக் கண்டுபிடிக்க உதவிய திரு. லிம் வெய் ஹாவ் என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது.
விருதுகள் வழங்கப்பட்ட அமைப்புகள்
ஃபேர் ப்ரைஸ் எக்ஸ்ட்ரா @ விவீசிட்டி, ஷாப்பி சிங்கப்பூர் மற்றும் ரெசார்ட்ஸ் வர்ல்ட் செண்டோசா ஆகிய அமைப்புகளும் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டன.
அதிகாரிகளின் வரிசையில், எண்டியுசி ஃபேர்ப்ரைசின் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்யும் திரு ஆண்டனி சாங் டின் ஹூவிக்கு, குற்றங்களை தடுக்க அவர் எடுத்த மாபெரும் முயற்சிகளுக்காக விருது வழங்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR