கோவையில் சோகம்! ரூ.90 லட்சம் தங்கத்துடன் மாயமான வடமாநில வாலிபர்!

கோவையில் நகை வடிவமைத்து தருவதாக 2  பேரிடம் ரூ.90 லட்சம் தங்கம் வாங்கி மாயமான வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 3, 2022, 05:26 PM IST
  • விசாரித்த போது.. தங்கத்துடன் மாயமானது தெரியவந்தது.
  • தெருவில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.
  • கோவையில் ரூ.90 லட்சம் தங்கத்துடன் வடமாநில வாலிபர் மாயம்.
கோவையில் சோகம்! ரூ.90  லட்சம் தங்கத்துடன் மாயமான வடமாநில வாலிபர்! title=

கோயம்புத்தூர்: கோவை பேரூர் மெயின் ரோடு செட்டி தெருவை சேர்ந்தவர் கனகராஜ், வயது 53. இவர் ஒரு தங்க நகை வியாபாரி. இவர் கோவை பெரியகடைவீதி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "கோவை செட்டி தெருவில் வசித்த கொல்கத்தாவை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் சுஜித் மைட்டி (வயது 40) என்பவரிடம் கொடுத்து, அதனை நகை ஆபரணங்களாக மாற்றி பெற்று விற்பனை செய்து வருகிறேன். 

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நான் அவரிடம் 420 கிராம் தங்க நகைகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி தருமாறு கொடுத்தேன். இதேபோல், எனது நண்பரும் அவரிடம் 578 கிராம் தங்கத்தை கொடுத்தார். ஆனால் சுஜித் மைட்டி எங்களிடம் வாங்கிய நகைகளை ஆபரணங்களாக மாற்றி தராமல் இருந்தார்.

இதனையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தங்கத்துடன் மாயமானது தெரியவந்தது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களது நகைகளை மீட்டு தரவேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளரை கடத்தி வட நாட்டவர் அட்டகாசம்

இதேபோல், செல்வபுரம் இந்திராபுரம் அமல்நகரை சேர்ந்த நகை வியாபாரி சந்தோஷ் (வயது 34) என்பவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது, "நான் கோவை செட்டி தெருவில் வசித்த சுஜித் மைட்டி என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தேன். இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி நான் 759.8 கிராம் தங்க நகைகளை ஆபரணங்களாக வடிவமைத்து தருவதற்காக சுஜித் மைட்டியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் திருப்பி கொடுக்காமல் செட்டி தெருவில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். 

எனவே அவரிடம் இருந்து நகைகளை மீட்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார். சுஜித் மைட்டி கோவையில் மொத்தம் 2  பேரிடம் சுமார் ரூ.90  லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ தங்கத்தை பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது போலீசார் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

கோவையில் ரூ.90  லட்சம் தங்கத்துடன் வடமாநில வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கணவனை கொன்றுவிட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடிய மனைவி.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News