தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்; சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
தாய்லாந்திலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நிலையில், பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காகிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த முகமது ஷகீல் (21) என்ற பயணி மீது, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்பொழுது அவர் வைத்திருந்த பெரிய கூடையை சந்தேகத்தில் திறந்து பார்த்து சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெரிய கூடைக்குள் உள்ள தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவர்கள் கடத்தி வரப்பட்டிருந்தன. இதை எடுத்து, சுங்கு அதிகாரிகள் அந்தப் பயணியை தனியே நிறுத்தி வைத்தனா். அதோடு சென்னையில் உள்ள மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சோதனையிட்டனா்.
மேலும் படிக்க | சென்னை விமானநிலையத்தில் ரூ.11.75 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
வட அமெரிக்கா நாட்டில் உள்ள கிங் ஸ்நேக் என்ற விஷமற்ற பதினைந்து பாம்புகளும், மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் எனற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் சேஷல்ஸ் தீவில் அதிகம் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற ஒருவகை ஆமை வகைகள் 2, மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1, மொத்தம் 23 விலங்குகள் இருந்தன.
இதை அடுத்து அந்த கடத்தல் ஆசாமியிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு, அங்கு தங்கி இருந்துவிட்டு, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்துள்ளார் என்று தெரியவந்தது. இவைகளை எதற்காக வாங்கி வந்தார்? என்று எதுவும் தெரியவில்லை. இது விஷமற்ற பாம்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் இவைகளை கொண்டு வரும்போது, முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் பெற்று, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்தே கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கடத்தல் ஆசாமியிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை இவர் எதற்காக கொண்டு வந்தார்? ஏதாவது யாரையாவது பயமுறுத்துவதற்காகவா? இல்லையேல் சர்க்கஸ் போன்றவைகளில் பயன்படுத்துவதற்காக, எடுத்து வந்தாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | இந்தியா-அமீரகம் இடையில் புதிய விமானங்களை அறிவித்தது இண்டிகோ நிறுவனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ