இந்திய விமான நிறுவனமான இண்டிகோ செப்டம்பர் 22 முதல் மும்பை மற்றும் ராஸ் அல் கைமா இடையே புதிய நேரடி விமானங்களை அறிவித்துள்ளது. இது ராஸ் அல் கைமாவை அதன் 6E நெட்வொர்க்கில் கேரியரின் 100வது இடமாக்கும். இது இந்திய மற்றும் அமீரக பயணுகளுக்கு மிக நல்ல செய்தியாக இருக்கும். இது குறித்து விமான நிறுவனம் பல தகவல்களை அளித்துள்ளது.
இண்டிகோவின் தலைமை அதிகாரிகளில் ஒருவர், நான்காவது எமிரேட்சில் நிறுவனம் நுழைவதற்கான அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ராஸ் அல் கைமா நிறுவனத்தின் 26 ஆவது சர்வதேச டெஸ்டினேஷனாகவும் ஒட்டுமொத்த டெஸ்டினேஷன்களில் 100 ஆவதாகவும் இருக்கும் என அவர் கூறினார்.
அதிக அளவிலான பயணிகள் ராஸ் அல் கைமாவிற்கு பயணம் செய்கிறார்கள். குறிப்பாக, 2021 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய சர்வதேச மூல சந்தையாக இருந்தது. இந்த ஆண்டு கோவிட் தொற்றுக்கு முந்தைய நிலைகளுக்கு விமான போக்குவரத்து இருக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
அதிகரித்த இணைப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாடுகளுக்கு இடையே நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை வலுப்படுத்தும் என நிறுவனம் நம்புகிறது. இந்த விமானங்கள் "புதிய மற்றும் மலிவு விலையில் பறக்கும் விருப்பங்களைத் தொடர்ந்து தேடும் வணிக மற்றும் ஓய்வுநேரப் பயணிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராஸ் அல் கைமா மற்றும் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் சார்பில், “இண்டிகோ விமான நிறுவனத்துடனான ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தின் கூட்டாண்மை, தொற்றுநோய்க்கு பிறகு பழைய நிலைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். நாங்கள் அவர்களை முழு மனதுடன் வரவேற்கிறோம் மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து அதிகரித்து வரும் பயணிகளின் வருகைக்கு ஏற்ற வசதிகளை செய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ராஸ் அல் கைமாவின் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா மற்றும் தொழில்துறை இந்த இணைப்பின் மூலம் பயனடையும் மற்றும் விமான நிலையத்திற்கான எங்களின் தற்போதைய விரிவாக்க உத்தியில் இந்த கூட்டாண்மை ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டவுடன் இந்திய துணைக்கண்டத்திலிருந்து ஏராளமான வாய்ப்புகள் வரும் என நிறுவனம் நம்புகிறது. ஏனெனில் மும்பை ஒரு முக்கிய விமான மையமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இண்டிகோ சேவை உள்ள இந்திய நகரங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் பல்வேறு பயணிகள் இணைக்கப்படுவார்கள் என நிறுவனம் நம்புகிறது.
மேலும் படிக்க | அமீரக மக்களுக்கு குட் நியூஸ்: உணவுப் பொருட்களின் விலைகள் குறையவுள்ளன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ