சவூதி அரேபியா தனது குடிமக்களுக்கான கோவிட் 19 பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் திங்களன்று அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துருக்கி, எத்தியோப்பியா, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய இடங்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.


பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கோவிட் 19 தடுப்பூசிக்கான ஆதாரங்களை வழங்குவது மற்றும் மூடிய இடங்களில் முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை கோவிட் 19 நடவடிக்கைகள் கைவிடப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | துபாயில் இந்திய தூதரகம் நடத்தும் பாஸ்போர்ட் சேவை முகாம்; முழு விபரம் 


கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட போதிலும், சவுதி உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதி, மதீனாவில் உள்ள நபி மசூதி மற்றும் சவுதி பொது சுகாதார ஆணையம் வெகாயாவால் கட்டுப்படுத்தப்படும் இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியது. முகக்கவசம் கட்டாயம் என கூறப்பட்டிருக்கும் அனைத்து இடங்களிலும் மக்கள் அந்த நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெளிநாடு செல்ல விரும்பும் சவுதி அரேபிய குடிமக்களுக்கான தடுப்பூசி காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திய மூன்றாவது மாதத்துக்குள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பயணிகள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி முன்னர் இருந்தது. எனினும், அந்த காலக்கெடு இப்போது எட்டு மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சவுதியின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அப்போது வெளிப்புறங்களில் முகக்கவசங்களை அணிதல், தனி மனித இடைவெளி, உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட-வருகை விதிகள் கைவிடப்பட்டன.


மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய செய்தி: தீவிரமாகும் பணியிட பாதுகாப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR