தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெறுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 22, 2022, 11:09 AM IST
  • அதிகரிக்கும் கொரோனா வைரஸ்
  • மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்
  • அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியன் title=

சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி , உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு நூற்றுக்கணக்கில் உயர்கிறது. உலகளவில் தொற்று அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளது.

Corona

தமிழ்நாட்டில் பாதுகாப்பான சூழல் அவசியம். நேற்று ஐஐடியில் 3 பேருக்கு தொற்று என்றவுடன் உடனே அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐஐடியில் 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வட மாநிலங்களில் இருந்து சென்னை வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வட மாநில தொழிலாளர்கள் குழு குழுவாக வருகின்றனர். தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம்  தொழிலாளர்களுக்கு  இலவச ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு இலவச தடுப்பூசியும் செலுத்தப்படும்.

மேலும் படிக்க | பாலை மீண்டும் பாட்டிலில் அடைத்து விற்கலாமே!...சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

தமிழ்நாட்டில் 92.42 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியையும் , 77.69 விழுக்காட்டினர் இரண்டாம் தவணையையும் செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணையை 1 கோடியே 46 லட்சம் பேர் செலுத்தாமல் உள்ளனர் . 

54 லட்சம் பேர்  முதல் தவணை செலுத்தாமல் உள்ளனர். இலவு காத்த கிளியாக தடுப்பூசி செலுத்துவோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் மெகா  தடுப்பூசி முகாமை நிறுத்தினோம்.  மே மாதம் 8ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடத்த உள்ளோம்.

மேலும் படிக்க | ‘குறைந்த தொகைக் கொடுத்து அவமானப்படுத்த வேண்டாம்.!’ தமிழக அரசுக்கு செ. உயர்நீதிமன்றம் சொன்ன ‘அட்வைஸ்’

முதல் தவணை செலுத்திக் கொள்ளாத 54 லட்சம் பேர் , இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ள 1கோடியே 46 லட்சம் பேர் என ஏறக்குறைய 2 கோடி பேரை மனதில் வைத்து இந்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தவணை செலுத்தாமல் உள்ளோரை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து 8ஆம் தேதி   தடுப்பூசி செலுத்த வேண்டுகோள் விடுப்போம் " என்றார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News