இலங்கையில் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தில், புதிதாக 9 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். எதிர்கட்சி எம்.பிகளும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை தலைநகர் கொழும்புவில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று காலை 10 மணியளவில் அதிபர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.


கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


 எந்தெந்த அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் கிடைத்துள்ளன என இங்கே காணலாம்: 


- நிமல் சிறிபால டி சில்வா: துறைமுகங்கள், கப்பற்துறை, விமான சேவை அமைச்சர்


- சுசில் பிரேமஜயந்த: கல்வி அமைச்சர்


-  கெஹெலிய ரம்புக்வெல்ல: சுகாதார அமைச்சர்


- ஹரீன் பெர்ணாண்டோ: சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்


- மனுஷ நாணயக்கார: தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்


- நளின் பெர்னாண்டோ: வர்த்தகம் அமைச்சர்


- விஜயதாச ராஜபக்ச: நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசியலமைப்பு விவகாரம் அமைச்சர்


- ரமேஷ் பத்திரன: பெருந்தோட்டத்துறை அமைச்சர்


- டிரான் அலஸ்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்


மேலும் படிக்க | இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை


இதற்கு முன்னதாக நான்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பரமாணம் செய்துகொண்டிருந்தனர்.


- தினேஷ் குணவர்தன: பொது நிர்வாக  அமைச்சர்


- பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்: வெளிவிவகார அமைச்சர்


- பிரசன்ன ரணதுங்க: நகர அபிவிருத்தி அமைச்சர்


- காஞ்சன விஜேசேகர: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்


அதிபர், பிரதமர் உட்பட 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இன்றைய தினம் 9 பேருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. எஞ்சிய உறுப்பினர்களுக்கு எதிர்வரும் காலங்களில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்தோடு, 25 இராஜாங்க அமைச்சர்கள் பின்னர் நியமனம் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் அணியைச் சேர்ந்த இருவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்கார, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக எங்களின் உறுப்பினர்கள் யாரும் பதவி வாங்க மாட்டோம் என கடந்த காலங்களில் தெரிவித்திருந்த சஜித் பிரேமதாசவிற்கு இது ஒரு ஏமாற்றமாக மாறியுள்ளது.


அத்தோடு, இலங்கை சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும், இலங்கை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் பதவிகளை பெற்றுள்ளனர். 


புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.


 இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே இன்றைய தினம் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்க வேண்டும்: திருமுருகன் காந்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR