அண்டை நாடான இலங்கையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர். அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதற்கிடையில், ஆழ்ந்த நிதி மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை மற்றுமொரு பாரிய தீர்மானத்தை எடுத்துள்ளது. இலங்கையின் பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் ஒரு வாரத்திற்கு மூடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை பங்குச் சந்தை மூடப்பட்டது
இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. எஸ்இசி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலீட்டாளர்களுக்கு இங்குள்ள சந்தையைப் பற்றி மேலும் தெளிவு மற்றும் புரிதலை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 22 வரை கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் தற்காலிகமாக மூடப்படும்.


மேலும் படிக்க | Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்...


இதற்கு ஒரு நாள் முன்னதாக, கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபை, வர்த்தகத்தை தற்காலிகமாக மூடுமாறு இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுயிடம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களாக இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையைக் கருத்திற்கொண்டு இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இந்த பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.


இதற்கிடையில் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2020 ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் வருமானம் சந்தை மாற்று விகிதத்தின் படி வருடாந்தம் 4053 டொலர்களாகவும், கொள்வனவு சக்தி சமநிலையின் அடிப்படையில் வருடாந்தம் 13,537 டொலர்களாகவும் இருந்ததை மதிப்பிட முடியும். இது தவிர, மனித அபிவிருத்தி அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவை விட 2020 இல் இலங்கையின் நிலை சிறப்பாக இருந்தது. ஐக்கிய நாடுகளின் மனித அபிவிருத்தி அறிக்கை 2020 இல், இலங்கை 72 வது இடத்தில் இருந்தது, அதே நேரத்தில் இந்தியாவின் இடம் 131 வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR