நமது அண்டை நாடான இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்கள் தற்போது வன்முறையின் வெறியாட்டத்தை அனுபவித்து வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், இலங்கை-யில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் குறித்த கவலை உலகளாவிய அனைத்து தமிழர்கள் இடையிலும் அதிகரித்து வருகிறது. 


இந்த நிலையில், இலங்கையில் பயங்கரமான பாதிப்புகளை அனுபவித்து, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களின் சாபத்தின் காரணமாகத்தான் இன்று இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது என தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


மகிந்த ராஜபக்ச பதவி விலகியது குறித்து விஜயகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 


முன்னதாக, இலங்கையில் கடுமையான நெருக்கடி மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 


தமிழினத்துக்காக போராடிய பிரபாகரனை ராஜபக்ச இரக்கமில்லாமல் கொன்றார் என்றும், அது மட்டுமல்லாமல், எத்தனையோ அப்பாவி தமிழ் மக்களை அவர் கொன்றுள்ளார் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். 


இலங்கையில் அப்பாவி தமிழின மக்களை கொன்றார் ராஜபக்ச. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு ராஜபக்சவுக்கு பெரிய தண்டனை கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.



மேலும், ராஜபக்சவின் தற்போதைய நிலையால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் உயிரிழந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மாக்களும் சாந்தி அடைந்திருக்கும் என்று கூறிய விஜயகுமார், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார். 



இலங்கையில் வாடும் தமிழ் மக்களுக்காக பல தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்றி பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க | மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்


இந்த அறிக்கையில், “இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் சூழலில், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான அங்குள்ள தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. ராஜபக்ச-வின் பரம்பரை வீடு எரிக்கப்பட்டது. அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தங்காலையில் ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் உருவபொம்மை சிலரால் உடைக்கப்பட்ட நிலையில், அம்பாந்தோட்டாவில் ராஜபக்சவின் பாரம்பரிய வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இலங்கை அதிகாரிகளால் பகிரப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மோதல்களில் இதுவரை குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர், 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இலங்கையில் இன்று வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தால் நாளை ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்படும் என இலங்கை பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR