இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து தப்பித்த 40 கைதிகள் படகுகள் மூலம் தமிழகத்திற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 11, 2022, 03:00 PM IST
  • கலவரத்தின் போது தப்பித்த 40 சிறை கதைகள்
  • தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம்
  • கடல் எல்லையில் போலீஸ் பாதுகாப்பு
இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..! title=

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அந்த நாட்டில் கடும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டில் உள்ள மக்கள் கடந்த சில வாரங்களாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்து வருகின்றனர். தற்போது, அங்கு நிலைமை மோசமானதால் இந்தியாவிற்குள் நுழைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இலங்கையில் உள்ள மக்கள் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்திய கடற்படையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறையினரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Sri Lankan,prison inmates,Intelligence,Navy,இலங்கை சிறை கைதிகள்

உளவுத்துறை எச்சரிக்கை 

இலங்கையில் இருந்து சிங்களர்களும், தமிழர்களும் மட்டுமின்றி இலங்கையில் உள்ள சிறையில் உள்ள கைதிகளும் தப்பித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டிற்குள் நுழையும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் ரோந்து பணிகள் 24  மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Sri Lankan,prison inmates,Intelligence,Navy,இலங்கை சிறை கைதிகள்

கொழும்பு வன்முறையின்போது தப்பிய 40ற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பித்தனர். அவர்கள் தமிழகம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவக்க கூடும் என கரையோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதி போராட்டத்திற்குள் மகிந்தராசபக்சவின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையின்போது சிறைக் கைதிகளும் ஈடுபட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கிடையே, கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வன்முறை இடம்பெற்ற இடத்தில் அகப்பட்டதனால் அதிலிருந்த கைதிகள் தப்பி விட்டதாகச் சிறைச்சாலை ஆணையர் நாயகம் தெரிவித்திருந்தார். 

Sri Lankan,prison inmates,Intelligence,Navy,இலங்கை சிறை கைதிகள்

மேலும் படிக்க | வீட்டு கதவை தட்டும் கரடியால் கிராம மக்கள் அச்சம்

இந்நிலையில், 40 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்தது உறுதியானதால் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தமிழகத்திற்கு நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இராமேஸ்வரம், கோடியக்கரை, தொண்டி மற்றும் நாகை மாவட்ட கரையோரங்கள்  போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | மாநகராட்சி பணியாளர்களை தாக்கிய பாஜகவினர் - 25 பேர் மீது வழக்கு பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News