பற்றி எரிகிறது இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய அரசு ஆதரவாளர்கள்
இலங்கையில், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பல நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பல நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாத நிலையில், எதையும் இறக்குமதி செய்யும் முடியாமல், நெருக்கடி நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என கூறப்படும் குழு ஒன்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். போராட்ட கூடாரம் ஒரு கும்பலால் அப்புறப்படுத்தப்பட்டது.
கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய போலீஸ் பிரிவுகளுக்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்
கோட்டகோகம மற்றும் மைனகோகம ஆகிய போராட்ட தளங்களில் அரசாங்க சார்பு ஆதரவாளர்களுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதல்களை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் மைனகோகம என பெயரிடப்பட்ட போராட்ட தளத்தை தாக்கிய குழுவினர் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள கோட்டகோகம போராட்ட தளத்தை நோக்கி சென்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இடையே திங்கட்கிழமை (மே,9ம் தேதி) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய சில நிமிடங்களிளுக்கு பின்னர், அலரிமாளிகைக்கு எதிரே உள்ள மைனகோகம போராட்டத் தளம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மைனகோகம எதிர்ப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR