Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர, அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் கூட்டாக இராஜினாமா செய்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என்பது தான் நிலைமை. மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், இவ்வளவு வளர்ச்சியடைந்த நாடு இவ்வளவு மோசமான நிலையை அடைந்தது ஏன் என்ற கேள்விக்கான எளிமையான பதில் இலங்கையின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது தான்.
இதை அடுத்து கருவூலம் எப்படி காலியானது என்ற இன்னொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. இப்போது இந்தக் கேள்விக்கு விடை காண, பல ஆண்டுகளாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்த இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய வேண்டும்.
அண்ணன்-மகன், மருமகன் நடத்தும் ஆட்சி
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பான தற்போதைய முக்கிய செய்தி என்னவெனில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர, அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக இராஜினாமா செய்துள்ளனர். இப்போது அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இந்த அமைச்சர்களின் பட்டியலைப் பார்த்தால் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புலப்படும்.
இலங்கையின் அதிபராக இருப்பவர் கோத்தபய ராஜபக்ச. இலங்கையின் பிரதமராக அதிபரின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே உள்ளார். மகிந்த ராஜபக்ச இலங்கையின் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சகத்தையும் வைத்துள்ளார். மகிந்த ராஜபக்ச, முன்னதாக, இலங்கை அதிபராகவும் இருந்துள்ளார்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்
ராஜபக்சே குடும்பத்தின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சே இலங்கையின் உள்துறை அமைச்சராக உள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சே இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். தொழில்நுட்ப அமைச்சும் நாமல் ராஜபக்சவிடம் உள்ளது. சமல் ராஜபக்சேவின் மகன் ஷஷேந்திர ராஜபக்சே இலங்கையின் விவசாய அமைச்சராக உள்ளார்.
இரண்டு தசாப்தங்களாக ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி
இலங்கையில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ராஜபக்சே குடும்பம் ஆட்சியில் உள்ளது. இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்சே முக்கிய பங்கு வகித்துள்ளார். 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை வீழ்த்தி இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர். 2004ம் ஆண்டு இலங்கையின் பிரதமரானார். இந்தப் பதவி 2005 வரை மட்டுமே நீடித்தது. அதன் பிறகு அவர் நாட்டின் அதிபராகி, 2015 வரை அப்பதவியில் இருந்தார். அதாவது, கடந்த 18 வருடங்களாக இலங்கையின் அதிகாரத்திற்கான திறவுகோல் ராஜபக்சே குடும்பத்திடம் உள்ளது.
மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்
அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து தேர்தலில் போட்டி
மகிந்த ராஜபக்ச கடந்த 2015ஆம் ஆண்டு வரை இரண்டு முறை இலங்கை அதிபராக இருந்துள்ளார். மூன்றாவது முறையாக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் எதிர்கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டார். இதற்குப் பிறகு, குற்றம் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினையில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சியில் நிலைக்க முடியவில்லை. மீண்டும் ஒருமுறை ராஜபக்ச குடும்பத்திற்கு பொதுமக்கள் வாய்ப்பு கொடுத்தனர். 2019ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச எளிதாக வெற்றி பெற்று அதிபரானார்.
சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை
கடந்த தசாப்தத்தில் இருந்து இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதாகவும். ஆனால் 2020 ஆம் ஆண்டிலிருந்து நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்கும் வகையிலான முடிவுகளை இலங்கை அரசாங்கத்தால் எடுக்க முடியவில்லை. இதன் மூலம் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. அதன் விளைவைத் தான் தற்போது உலகம் காண்கிறது.
மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR