சென்னை வானகரம் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் நியூசிலாந்து நாட்டில் பட்டய படிப்பை முடித்துவிட்டு அங்கே உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அப்போது நியூசிலாந்து நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் விக்டோரியா ஹேமில்டன் என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் லோகேஷ், விக்டோரியா ஹேமில்டன் திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள முருகன் கோவிலில் தமிழ் கலாச்சாரத்தின் படி அம்மி மிதித்து, தாலி கட்டி, உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.



மேலும் படிக்க | பிரான்ஸ் நாட்டு காதலனை கரம்பிடித்த சேலத்து பெண் பொறியாளர்


தமிழர் பாரம்பரிய உடையான பட்டு புடவை, தங்க நகைகள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.


தற்போது வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளிநாடு செல்லும் இளம் பெண்களும் ஆண்களும், தங்களுக்கான வாழ்க்கைத் துணையை அங்கேயே தேடிக் கொள்ளும் போக்கு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. 



மேலும் படிக்க | தமிழகம் ஊடுருவ முயலும் முன்னாள் விடுதலைப்புலிகள்: வெளியான உளவு தகவல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR