பிரான்ஸ் நாட்டு காதலனை கரம்பிடித்த சேலத்து பெண் பொறியாளர்

பிரான்ஸ் நாட்டு காதலை கரம் பிடித்த சேலத்து பெண் பொறியாளரின் திருமணம், தமிழ் கலாச்சார பாரம்பரியத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 28, 2022, 11:05 AM IST
  • சேலத்தில் நடைபெற்ற காதல் திருமணம்
  • பிரான்ஸ் இளைஞரை கரம்பிடித்த சேலம் பெண்
  • இருவீட்டார் சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி நடந்தது
பிரான்ஸ் நாட்டு காதலனை கரம்பிடித்த சேலத்து பெண் பொறியாளர் title=

சேலம் மாவட்டம்,  வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் கந்தசாமி. இவரின் மூத்த மகள் கிருத்திகா பொறியாளராக சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பொறியாளர் அசானே ஒச்சோயிட் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

மேலும் படிக்க | கோவையில் இனி எங்கு சென்றாலும் இலவச wi-fi இருக்கு - கவலை எதுக்கு !

இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர். சேலத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தொடர்ந்து சேலம் ஐந்து ரோடு பகுதியிலுள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடைபெற்ற இத்திருமண விழாவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகன் ஆசானே ஒச்சோயிட், தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

இந்த திருமண விழாவில், வாழப்பாடியைச் சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தனர். தமிழர் உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம் அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் உணர்ச்சிபூர்வமாக திருமண முறை தங்களை நெகிழ வைத்தாகவும் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையகம் சென்னை - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News