குவைத்தில் உரிம நிபந்தனைகளை பின்பற்றாத 8000 வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அரசு ரத்து செய்தது. ஜனவரி முதல் ஜூன் 2022 வரையிலான மதிப்பீடுகளின்படி, 8000 வெளிநாட்டினர் மற்றும் 50 குவைத் பெற்றோரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்வைக் குறைபாடு மற்றும் மனநலக் குறைபாடுகள் காரணமாக போக்குவரத்துக்கான பொது இயக்குநரகம் பலரது உரிமத்தை ரத்து செய்தது. குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமம் பெற, அவர்கள் செய்யும் வேலை, சம்பளம், தொழில், விசா காலம் மற்றும் உடல்நலம் போன்ற பல காரணிகளை அரசாங்கம் பரிசீலிக்கும்.


நாட்டின் விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து ரத்து செய்யும் முறை உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுத்தப்பட்டது. படிப்பை முடித்த வெளி நாட்டு மாணவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஹோம் டெலிவரி செய்பவர்களின் ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டவைகளில் அடங்கும்.


மேலும் படிக்க | UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்; அரசு வெளியிட்டுள்ள தகவல்


வெளிநாட்டவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு புதிய தரநிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது போக்குவரத்து இயக்குனரகம், மனித வள ஆணையம் மற்றும் குடியிருப்பு விவகாரங்கள் துறை ஆகியவை இதில் முக்கிய பங்காற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொழில் உரிமம் பெற்ற வெளிநாட்டினர் தங்கள் தொழில் மாறிறினால் அல்லது நிறுத்தப்பட்டால், அவர்களின் உரிமத்தை தானாக ரத்து செய்யும் வழிமுறையும் உள்ளது. இந்த நடவடிக்கைகள் உரிமங்களை வழங்குவதில் கையாளுதலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால், 2022ல் உரிம விநியோகம் 50 சதவீதமாக குறையும் என்று குவைத் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ