ஆஷா பணியாளர்களை கவுரவித்த WHO; 10 லட்சம் பேருக்கு விருது
உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிய நிலையில், ஆஷா பணியாளர்கள் தான் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சையளித்தனர்.
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியவர்களில் ஆஷாக்களின் பங்கு முக்கியமானது. உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிய நிலையில், ஆஷா பணியாளர்கள் தான் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சையளித்தனர்.
முக்கியமாக கிராமப்புறங்களில் நேரடியாக மருத்துவ சேவை வழங்க, அவர்கள் மேற்கொண்ட பணி அசாத்தியமானது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அல்லும் பகலும் அயராது பணியாற்றிய 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிவித்துள்ள ‘6 உலக சுகாதார தலைவர்கள்’ விருதுகளில் ஒன்று இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷா பணியாளர்களுக்கு (ASHA) கிடைத்திருக்கிறது. உலக சுகாதாரத்திற்காக ஆற்றிய பணி, தலைமைப் பண்புடன் மேற்கொண்ட பணி, பிராந்திய சுகாதார பிரச்சினைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் பணியாற்றுதல் ஆகியவற்றுக்காக, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் ஆதனம் 6 விருதுகளை அறிவித்தார்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆஷா திட்டம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஒழிப்புக்காக WHO விருது வென்றுள்ள ஆஷாக்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் விருதை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள ஆஷா பணியாளர்களை பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR