8.5 கிலோ தங்கம், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்: கொழும்பில் கைதான இரண்டு இந்தியர்கள்
இந்திய நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் இலங்கை சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று பேர் இலங்கையில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டுள்ளனர்.
இந்திய நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் இலங்கை சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று பேர் இலங்கை தலை நகர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டுள்ளனர்.
இந்த மூன்று நபர்களிடமிருந்து எட்டரை கிலோ எடையுள்ள தங்க நகைகள், பாதியாக வெட்டப்பட்ட தங்க பிஸ்கட்டுகள், 75 ஆயிரம் அமெரிக்கன் டாலர்கள், 18000 யூரோ டாலர்கள் அவர்கள் கொண்டு வந்த பைகளிலும் உடைகளிலும் மறைத்து எடுத்து வந்திருந்தது அந்நாட்டு சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டு மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் நீண்ட நாட்களாக தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை தொடர்ந்து கடத்தி வரும் கடத்தல்காரர்கள் பட்டியலில் இருந்து வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் படிக்க | முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்; எதிர்க்கும் இலங்கை மீனவர்கள்
அதேபோல 46 வயதான இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் வர்த்தகர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த நேரத்தில், இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR