ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். விசா காலாவதியான நிலையில், கடல் வழியாக இவர்கள் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை வவுனியா அருகே உள்ள கல்நாட்டினார்குளம் பகுதியை சேர்ந்தவர் வர்கீர்த்தனன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி விசா மூலம் சென்னைக்கு வந்துள்ளார்.


அவர் சென்னை வந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விசா காலாவதியாகி விட்டது. இதனால் இலங்கைக்கு விசா மூலம் செல்ல வாய்ப்பு இல்லை என்பதால், ராமேசுவரம் சென்று கடல் வழியாக ரகசிய பயணம் செய்ய கீர்த்தனன் திட்டமிட்டார்.



இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில் மூலம் ராமேசுவரம் வந்த அவர், படகு மூலம் இலங்கை செல்வதற்காக ஒரு ஏஜெண்டை தேடினார். அப்போது அவர் ராமேசுவரம் புது ரோடு சுனாமி காலனியை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரை நாடினார்.


அவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து தன்னை படகு மூலம் இலங்கை பகுதியில் விட்டு விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.



மேலும் படிக்க | Live Update: இன்றைய முக்கிய செய்திகள் உடனுக்குடன் (2022 ஜூன் 02) 


இதுபற்றி கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ரகசியமாக விசாரணை நடத்தி கண்காணித்து வந்த அவர்கள், ராமேசுவரம் பகுதியில் வைத்து கீர்த்தனன் மற்றும் முத்துக்குமரனை பிடித்தனர்.


அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கீர்த்தனன் இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்பி செல்ல இருந்ததும், அவருக்கு முத்துக்குமரன் உதவி செய்ததும் உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


மேலும் கீர்த்தனிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்க பணம், காலாவதியான பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 2 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் படிக்க | தமிழக ஆளுநர் முதல்வர் சந்திப்பு : காரணம் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR